Find
Chapter 13: Al-Ra`ad
13:0-43
43 verses Revelation order 96
سورة الرعد

. ١:١٣ المر تِلكَ ءايٰتُ الكِتٰبِ وَالَّذى أُنزِلَ إِلَيكَ مِن رَبِّكَ الحَقُّ وَلٰكِنَّ أَكثَرَ النّاسِ لا يُؤمِنونَ

. ٢:١٣ اللَّهُ الَّذى رَفَعَ السَّمٰوٰتِ بِغَيرِ عَمَدٍ تَرَونَها ثُمَّ استَوىٰ عَلَى العَرشِ وَسَخَّرَ الشَّمسَ وَالقَمَرَ كُلٌّ يَجرى لِأَجَلٍ مُسَمًّى يُدَبِّرُ الأَمرَ يُفَصِّلُ الـٔايٰتِ لَعَلَّكُم بِلِقاءِ رَبِّكُم توقِنونَ

. ٣:١٣ وَهُوَ الَّذى مَدَّ الأَرضَ وَجَعَلَ فيها رَوٰسِىَ وَأَنهٰرًا وَمِن كُلِّ الثَّمَرٰتِ جَعَلَ فيها زَوجَينِ اثنَينِ يُغشِى الَّيلَ النَّهارَ إِنَّ فى ذٰلِكَ لَـٔايٰتٍ لِقَومٍ يَتَفَكَّرونَ

. ٤:١٣ وَفِى الأَرضِ قِطَعٌ مُتَجٰوِرٰتٌ وَجَنّٰتٌ مِن أَعنٰبٍ وَزَرعٌ وَنَخيلٌ صِنوٰنٌ وَغَيرُ صِنوٰنٍ يُسقىٰ بِماءٍ وٰحِدٍ وَنُفَضِّلُ بَعضَها عَلىٰ بَعضٍ فِى الأُكُلِ إِنَّ فى ذٰلِكَ لَـٔايٰتٍ لِقَومٍ يَعقِلونَ

. ٥:١٣ وَإِن تَعجَب فَعَجَبٌ قَولُهُم أَءِذا كُنّا تُرٰبًا أَءِنّا لَفى خَلقٍ جَديدٍ أُولٰئِكَ الَّذينَ كَفَروا بِرَبِّهِم وَأُولٰئِكَ الأَغلٰلُ فى أَعنٰقِهِم وَأُولٰئِكَ أَصحٰبُ النّارِ هُم فيها خٰلِدونَ

. ٦:١٣ وَيَستَعجِلونَكَ بِالسَّيِّئَةِ قَبلَ الحَسَنَةِ وَقَد خَلَت مِن قَبلِهِمُ المَثُلٰتُ وَإِنَّ رَبَّكَ لَذو مَغفِرَةٍ لِلنّاسِ عَلىٰ ظُلمِهِم وَإِنَّ رَبَّكَ لَشَديدُ العِقابِ

. ٧:١٣ وَيَقولُ الَّذينَ كَفَروا لَولا أُنزِلَ عَلَيهِ ءايَةٌ مِن رَبِّهِ إِنَّما أَنتَ مُنذِرٌ وَلِكُلِّ قَومٍ هادٍ

. ٨:١٣ اللَّهُ يَعلَمُ ما تَحمِلُ كُلُّ أُنثىٰ وَما تَغيضُ الأَرحامُ وَما تَزدادُ وَكُلُّ شَىءٍ عِندَهُ بِمِقدارٍ

. ٩:١٣ عٰلِمُ الغَيبِ وَالشَّهٰدَةِ الكَبيرُ المُتَعالِ

. ١٠:١٣ سَواءٌ مِنكُم مَن أَسَرَّ القَولَ وَمَن جَهَرَ بِهِ وَمَن هُوَ مُستَخفٍ بِالَّيلِ وَسارِبٌ بِالنَّهارِ

. ١١:١٣ لَهُ مُعَقِّبٰتٌ مِن بَينِ يَدَيهِ وَمِن خَلفِهِ يَحفَظونَهُ مِن أَمرِ اللَّهِ إِنَّ اللَّهَ لا يُغَيِّرُ ما بِقَومٍ حَتّىٰ يُغَيِّروا ما بِأَنفُسِهِم وَإِذا أَرادَ اللَّهُ بِقَومٍ سوءًا فَلا مَرَدَّ لَهُ وَما لَهُم مِن دونِهِ مِن والٍ

. ١٢:١٣ هُوَ الَّذى يُريكُمُ البَرقَ خَوفًا وَطَمَعًا وَيُنشِئُ السَّحابَ الثِّقالَ

. ١٣:١٣ وَيُسَبِّحُ الرَّعدُ بِحَمدِهِ وَالمَلٰئِكَةُ مِن خيفَتِهِ وَيُرسِلُ الصَّوٰعِقَ فَيُصيبُ بِها مَن يَشاءُ وَهُم يُجٰدِلونَ فِى اللَّهِ وَهُوَ شَديدُ المِحالِ

. ١٤:١٣ لَهُ دَعوَةُ الحَقِّ وَالَّذينَ يَدعونَ مِن دونِهِ لا يَستَجيبونَ لَهُم بِشَىءٍ إِلّا كَبٰسِطِ كَفَّيهِ إِلَى الماءِ لِيَبلُغَ فاهُ وَما هُوَ بِبٰلِغِهِ وَما دُعٰؤُاْ الكٰفِرينَ إِلّا فى ضَلٰلٍ

. ١٥:١٣ وَلِلَّهِ يَسجُدُ مَن فِى السَّمٰوٰتِ وَالأَرضِ طَوعًا وَكَرهًا وَظِلٰلُهُم بِالغُدُوِّ وَالـٔاصالِ

. ١٦:١٣ قُل مَن رَبُّ السَّمٰوٰتِ وَالأَرضِ قُلِ اللَّهُ قُل أَفَاتَّخَذتُم مِن دونِهِ أَولِياءَ لا يَملِكونَ لِأَنفُسِهِم نَفعًا وَلا ضَرًّا قُل هَل يَستَوِى الأَعمىٰ وَالبَصيرُ أَم هَل تَستَوِى الظُّلُمٰتُ وَالنّورُ أَم جَعَلوا لِلَّهِ شُرَكاءَ خَلَقوا كَخَلقِهِ فَتَشٰبَهَ الخَلقُ عَلَيهِم قُلِ اللَّهُ خٰلِقُ كُلِّ شَىءٍ وَهُوَ الوٰحِدُ القَهّٰرُ

. ١٧:١٣ أَنزَلَ مِنَ السَّماءِ ماءً فَسالَت أَودِيَةٌ بِقَدَرِها فَاحتَمَلَ السَّيلُ زَبَدًا رابِيًا وَمِمّا يوقِدونَ عَلَيهِ فِى النّارِ ابتِغاءَ حِليَةٍ أَو مَتٰعٍ زَبَدٌ مِثلُهُ كَذٰلِكَ يَضرِبُ اللَّهُ الحَقَّ وَالبٰطِلَ فَأَمَّا الزَّبَدُ فَيَذهَبُ جُفاءً وَأَمّا ما يَنفَعُ النّاسَ فَيَمكُثُ فِى الأَرضِ كَذٰلِكَ يَضرِبُ اللَّهُ الأَمثٰلَ

. ١٨:١٣ لِلَّذينَ استَجابوا لِرَبِّهِمُ الحُسنىٰ وَالَّذينَ لَم يَستَجيبوا لَهُ لَو أَنَّ لَهُم ما فِى الأَرضِ جَميعًا وَمِثلَهُ مَعَهُ لَافتَدَوا بِهِ أُولٰئِكَ لَهُم سوءُ الحِسابِ وَمَأوىٰهُم جَهَنَّمُ وَبِئسَ المِهادُ

. ١٩:١٣ أَفَمَن يَعلَمُ أَنَّما أُنزِلَ إِلَيكَ مِن رَبِّكَ الحَقُّ كَمَن هُوَ أَعمىٰ إِنَّما يَتَذَكَّرُ أُولُوا الأَلبٰبِ

. ٢٠:١٣ الَّذينَ يوفونَ بِعَهدِ اللَّهِ وَلا يَنقُضونَ الميثٰقَ

. ٢١:١٣ وَالَّذينَ يَصِلونَ ما أَمَرَ اللَّهُ بِهِ أَن يوصَلَ وَيَخشَونَ رَبَّهُم وَيَخافونَ سوءَ الحِسابِ

. ٢٢:١٣ وَالَّذينَ صَبَرُوا ابتِغاءَ وَجهِ رَبِّهِم وَأَقامُوا الصَّلوٰةَ وَأَنفَقوا مِمّا رَزَقنٰهُم سِرًّا وَعَلانِيَةً وَيَدرَءونَ بِالحَسَنَةِ السَّيِّئَةَ أُولٰئِكَ لَهُم عُقبَى الدّارِ

. ٢٣:١٣ جَنّٰتُ عَدنٍ يَدخُلونَها وَمَن صَلَحَ مِن ءابائِهِم وَأَزوٰجِهِم وَذُرِّيّٰتِهِم وَالمَلٰئِكَةُ يَدخُلونَ عَلَيهِم مِن كُلِّ بابٍ

. ٢٤:١٣ سَلٰمٌ عَلَيكُم بِما صَبَرتُم فَنِعمَ عُقبَى الدّارِ

. ٢٥:١٣ وَالَّذينَ يَنقُضونَ عَهدَ اللَّهِ مِن بَعدِ ميثٰقِهِ وَيَقطَعونَ ما أَمَرَ اللَّهُ بِهِ أَن يوصَلَ وَيُفسِدونَ فِى الأَرضِ أُولٰئِكَ لَهُمُ اللَّعنَةُ وَلَهُم سوءُ الدّارِ

. ٢٦:١٣ اللَّهُ يَبسُطُ الرِّزقَ لِمَن يَشاءُ وَيَقدِرُ وَفَرِحوا بِالحَيوٰةِ الدُّنيا وَمَا الحَيوٰةُ الدُّنيا فِى الـٔاخِرَةِ إِلّا مَتٰعٌ

. ٢٧:١٣ وَيَقولُ الَّذينَ كَفَروا لَولا أُنزِلَ عَلَيهِ ءايَةٌ مِن رَبِّهِ قُل إِنَّ اللَّهَ يُضِلُّ مَن يَشاءُ وَيَهدى إِلَيهِ مَن أَنابَ

. ٢٨:١٣ الَّذينَ ءامَنوا وَتَطمَئِنُّ قُلوبُهُم بِذِكرِ اللَّهِ أَلا بِذِكرِ اللَّهِ تَطمَئِنُّ القُلوبُ

. ٢٩:١٣ الَّذينَ ءامَنوا وَعَمِلُوا الصّٰلِحٰتِ طوبىٰ لَهُم وَحُسنُ مَـٔابٍ

. ٣٠:١٣ كَذٰلِكَ أَرسَلنٰكَ فى أُمَّةٍ قَد خَلَت مِن قَبلِها أُمَمٌ لِتَتلُوَا۟ عَلَيهِمُ الَّذى أَوحَينا إِلَيكَ وَهُم يَكفُرونَ بِالرَّحمٰنِ قُل هُوَ رَبّى لا إِلٰهَ إِلّا هُوَ عَلَيهِ تَوَكَّلتُ وَإِلَيهِ مَتابِ

. ٣١:١٣ وَلَو أَنَّ قُرءانًا سُيِّرَت بِهِ الجِبالُ أَو قُطِّعَت بِهِ الأَرضُ أَو كُلِّمَ بِهِ المَوتىٰ بَل لِلَّهِ الأَمرُ جَميعًا أَفَلَم يَا۟يـَٔسِ الَّذينَ ءامَنوا أَن لَو يَشاءُ اللَّهُ لَهَدَى النّاسَ جَميعًا وَلا يَزالُ الَّذينَ كَفَروا تُصيبُهُم بِما صَنَعوا قارِعَةٌ أَو تَحُلُّ قَريبًا مِن دارِهِم حَتّىٰ يَأتِىَ وَعدُ اللَّهِ إِنَّ اللَّهَ لا يُخلِفُ الميعادَ

. ٣٢:١٣ وَلَقَدِ استُهزِئَ بِرُسُلٍ مِن قَبلِكَ فَأَملَيتُ لِلَّذينَ كَفَروا ثُمَّ أَخَذتُهُم فَكَيفَ كانَ عِقابِ

. ٣٣:١٣ أَفَمَن هُوَ قائِمٌ عَلىٰ كُلِّ نَفسٍ بِما كَسَبَت وَجَعَلوا لِلَّهِ شُرَكاءَ قُل سَمّوهُم أَم تُنَبِّـٔونَهُ بِما لا يَعلَمُ فِى الأَرضِ أَم بِظٰهِرٍ مِنَ القَولِ بَل زُيِّنَ لِلَّذينَ كَفَروا مَكرُهُم وَصُدّوا عَنِ السَّبيلِ وَمَن يُضلِلِ اللَّهُ فَما لَهُ مِن هادٍ

. ٣٤:١٣ لَهُم عَذابٌ فِى الحَيوٰةِ الدُّنيا وَلَعَذابُ الـٔاخِرَةِ أَشَقُّ وَما لَهُم مِنَ اللَّهِ مِن واقٍ

. ٣٥:١٣ مَثَلُ الجَنَّةِ الَّتى وُعِدَ المُتَّقونَ تَجرى مِن تَحتِهَا الأَنهٰرُ أُكُلُها دائِمٌ وَظِلُّها تِلكَ عُقبَى الَّذينَ اتَّقَوا وَعُقبَى الكٰفِرينَ النّارُ

. ٣٦:١٣ وَالَّذينَ ءاتَينٰهُمُ الكِتٰبَ يَفرَحونَ بِما أُنزِلَ إِلَيكَ وَمِنَ الأَحزابِ مَن يُنكِرُ بَعضَهُ قُل إِنَّما أُمِرتُ أَن أَعبُدَ اللَّهَ وَلا أُشرِكَ بِهِ إِلَيهِ أَدعوا وَإِلَيهِ مَـٔابِ

. ٣٧:١٣ وَكَذٰلِكَ أَنزَلنٰهُ حُكمًا عَرَبِيًّا وَلَئِنِ اتَّبَعتَ أَهواءَهُم بَعدَما جاءَكَ مِنَ العِلمِ ما لَكَ مِنَ اللَّهِ مِن وَلِىٍّ وَلا واقٍ

. ٣٨:١٣ وَلَقَد أَرسَلنا رُسُلًا مِن قَبلِكَ وَجَعَلنا لَهُم أَزوٰجًا وَذُرِّيَّةً وَما كانَ لِرَسولٍ أَن يَأتِىَ بِـٔايَةٍ إِلّا بِإِذنِ اللَّهِ لِكُلِّ أَجَلٍ كِتابٌ

. ٣٩:١٣ يَمحُوا اللَّهُ ما يَشاءُ وَيُثبِتُ وَعِندَهُ أُمُّ الكِتٰبِ

. ٤٠:١٣ وَإِن ما نُرِيَنَّكَ بَعضَ الَّذى نَعِدُهُم أَو نَتَوَفَّيَنَّكَ فَإِنَّما عَلَيكَ البَلٰغُ وَعَلَينَا الحِسابُ

. ٤١:١٣ أَوَلَم يَرَوا أَنّا نَأتِى الأَرضَ نَنقُصُها مِن أَطرافِها وَاللَّهُ يَحكُمُ لا مُعَقِّبَ لِحُكمِهِ وَهُوَ سَريعُ الحِسابِ

. ٤٢:١٣ وَقَد مَكَرَ الَّذينَ مِن قَبلِهِم فَلِلَّهِ المَكرُ جَميعًا يَعلَمُ ما تَكسِبُ كُلُّ نَفسٍ وَسَيَعلَمُ الكُفّٰرُ لِمَن عُقبَى الدّارِ

. ٤٣:١٣ وَيَقولُ الَّذينَ كَفَروا لَستَ مُرسَلًا قُل كَفىٰ بِاللَّهِ شَهيدًا بَينى وَبَينَكُم وَمَن عِندَهُ عِلمُ الكِتٰبِ

Thunder

13:1. A. L. M. R.* These (letters) are proofs of this scripture. What is revealed to you from your Lord is the truth, but most people do not believe.

*13:1 These initials constitute a major component of the Quran's built-in proof of divine authorship, the miraculous mathematical code. See Appendix 1.

13:2. God is the One who raised the heavens without pillars that you can see, then assumed all authority. He committed the sun and the moon, each running (in its orbit) for a predetermined period. He controls all things, and explains the revelations, that you may attain certainty about meeting your Lord.

13:3. He is the One who constructed the earth and placed on it mountains and rivers. And from the different kinds of fruits, He made them into pairs - males and females. The night overtakes the day. These are solid proofs for people who think.

13:4. On earth, there are adjacent lots that produce orchards of grapes, crops, palm trees - dioecious and non-dioecious. Although they are irrigated with the same water, we prefer some of them over others in eating. These are solid proofs for people who understand.

13:5. If you ever wonder, the real wonder is their saying: "After we turn into dust, do we get recreated anew?" These are the ones who have disbelieved in their Lord. These are the ones who have incurred shackles around their necks. These are the ones who have incurred Hell, wherein they abide forever.

13:6. They challenge you to bring doom upon them, rather than turning righteous! Sufficient precedents have been set for them in the past. Indeed, your Lord is full of forgiveness towards the people, in spite of their transgressions, and your Lord is also strict in enforcing retribution.

13:7. Those who disbelieved say, "If only a miracle could come down to him from his Lord (we will then believe)." You are simply a warner - every community receives a guiding teacher.

13:8. God knows what every female bears, and what every womb releases, or gains. Everything He does is perfectly measured.

13:9. The Knower of all secrets and declarations; the Supreme, the Most High.

13:10. It is the same whether you conceal your thoughts, or declare them, or hide in the darkness of the night, or act in the daylight.

13:11. Shifts (of angels) take turns, staying with each one of you - they are in front of you and behind you. They stay with you, and guard you in accordance with God's commands. Thus, God does not change the condition of any people unless they themselves make the decision to change. If God wills any hardship for any people, no force can stop it. For they have none beside Him as Lord and Master.

13:12. He is the One who shows you the lightning as a source of fear, as well as hope, and He initiates the loaded clouds.

13:13. The thunder praises His glory, and so do the angels, out of reverence for Him. He sends the lightning bolts, which strike in accordance with His will. Yet, they argue about God, though His power is awesome.

13:14. Imploring Him is the only legitimate supplication, while the idols they implore beside Him, cannot ever respond. Thus, they are like those who stretch their hands to the water, but nothing reaches their mouths. The supplications of the disbelievers are in vain.

13:15. To God prostrates everyone in the heavens and the earth, willingly or unwillingly, and so do their shadows in the mornings and the evenings.*

*13:15 Even the disbelievers prostrate; they cannot, for example, control their heartbeats, their lungs, or peristalsis. The shadows are predetermined by God's design of the solar and the lunar orbits, and by the peculiar shape of the planet earth which causes the four seasons. The absolute precision of the sun/earth relation is proven by the invention of solar clocks and their shadows.

13:16. Say, "Who is the Lord of the heavens and the earth?" Say, "God." Say, "Why then do you set up besides Him masters who do not possess any power to benefit or harm even themselves?" Say, "Is the blind the same as the seer? Is darkness the same as the light?" Have they found idols besides God who created creations similar to His creations, to the point of not distinguishing the two creations? Say, "God is the Creator of all things, and He is the One, the Supreme."

13:17. He sends down water from the sky, causing the valleys to overflow, then the rapids produce abundant foam. Similarly, when they use fire to refine metals for their jewelry or equipment, foam is produced. God thus cites analogies for the truth and falsehood. As for the foam, it goes to waste, while that which benefits the people stays close to the ground. God thus cites the analogies.

13:18. Those who respond to their Lord deserve the good rewards. As for those who failed to respond to Him, if they possessed everything on earth - even twice as much - they would readily give it up as ransom. They have incurred the worst reckoning, and their final abode is Hell; what a miserable destiny.

13:19. Is one who recognizes that your Lord's revelations to you are the truth equal to one who is blind? Only those who possess intelligence will take heed.

13:20. They are the ones who fulfill their pledge to God, and do not violate the covenant.

13:21. They join what God has commanded to be joined, reverence their Lord, and fear the dreadful reckoning.

13:22. They steadfastly persevere in seeking their Lord, observe the Contact Prayers (Salat), spend from our provisions to them secretly and publicly, and counter evil with good. These have deserved the best abode.

13:23. They enter the gardens of Eden, together with the righteous among their parents, their spouses, and their children. The angels will enter to them from every door.

13:24. "Peace be upon you, because you steadfastly persevered. What a joyous destiny."

13:25. As for those who violate God's covenant after pledging to keep it, and sever what God has commanded to be joined, and commit evil, they have incurred condemnation; they have incurred the worst destiny.

13:26. God is the One who increases the provision for whomever He wills, or withholds it. They have become preoccupied with this life, and this life, compared to the Hereafter, is nil.

13:27. Those who disbelieve would say, "If only a miracle could come down to him from his Lord (we would believe)." Say, "God sends astray whomever He wills, and guides to Him only those who obey."

13:28. They are the ones whose hearts rejoice in remembering God. Absolutely, by remembering God, the hearts rejoice.

13:29. Those who believe and lead a righteous life have deserved happiness and a joyous destiny.

13:30. We have sent you (O Rashad)* to this community, just as we did for other communities in the past. You shall recite to them what we reveal to you, for they have disbelieved in the Most Gracious. Say, "He is my Lord. There is no god except He. I put my trust in Him alone; to Him is my ultimate destiny."

*13:30 If we add the gematrical value of ``Rashad'' (505), plus the value of ``Khalifa'' (725), plus the sura number (13), plus the verse number (30), we get 505+725+13+30 = 1273 = 19x67. God thus specifies the name of His messenger (see Appendix 2 for the details).

13:31. Even if a Quran caused mountains to move, or the earth to tear asunder, or the dead to speak (they will not believe). God controls all things. Is it not time for the believers to give up and realize that if God willed, He could have guided all the people? The disbelievers will continue to suffer disasters, as a consequence of their own works, or have disasters strike close to them, until God's promise is fulfilled. God will never change the predetermined destiny.

13:32. Messengers before you have been ridiculed; I permitted the disbelievers to carry on, then I punished them. How terrible was My retribution!

13:33. Is there any equal to the One who controls every single soul? Yet, they set up idols to rival God. Say, "Name them. Are you informing Him of something on earth that He does not know? Or, are you fabricating empty statements?" Indeed, the schemes of those who disbelieve have been adorned in their eyes. They are thus diverted from the right path. Whomever God sends astray can never find a guiding teacher.

13:34. They have incurred retribution in this life, and the retribution in the Hereafter is far worse. Nothing can protect them against God.

13:35. The allegory of Heaven, which is promised for the righteous, is flowing streams, inexhaustible provisions, and cool shade. Such is the destiny for those who observe righteousness, while the destiny for the disbelievers is Hell.

13:36. Those who received the scripture rejoice in what was revealed to you; some others may reject parts of it. Say, "I am simply enjoined to worship God, and never associate any idols with Him. I invite to Him, and to Him is my ultimate destiny."

13:37. We revealed these laws in Arabic, and if you ever acquiesce to their wishes, after this knowledge has come to you, you will have no ally, nor a protector, against God.

*13:37-38 The verse number (38) =19x2. Placing the values of ``Rashad'' (505) and ``Khalifa'' (725) next to 13:37-38, gives 505 725 13 37 38, or 19x26617112302 (Appendix 2).

13:38. We have sent messengers before you (O Rashad), and we made them husbands with wives and children. No messenger can produce a miracle without God's authorization, and in accordance with a specific, predetermined time.

13:39. God erases whatever He wills, and fixes. With Him is the original Master Record.

13:40. Whether we show you what we promise them, or terminate your life before that, your sole mission is to deliver (the message). It is us who will call them to account.

13:41. Do they not see that every day on earth, brings them closer to the end, and that God decides their life span, irrevocably? He is the most efficient Reckoner.

13:42. Others before them have schemed, but to God belongs the ultimate scheming. He knows what everyone is doing. The disbelievers will find out who the ultimate winners are.

13:43. Those who disbelieved will say, "You are not a messenger!" Say, "God suffices as a witness between me and you, and those who possess knowledge of the scripture."

இடியோசை

13:1. அ. ல. ம. ர.* (எழுத்துகளான) இவை இந்த வேதத்தின் சான்றுகளாகும். உம்முடைய இரட்சகரிடமிருந்து உமக்கு இறக்கப்பட்டதுதான் சத்தியமாகும், ஆனால் மனிதர்களில் அதிகமானோர் நம்பிக்கை கொள்வதில்லை.

*13:1 இந்த துவக்க எழுத்துகள், குர்ஆனின் உள்ளே கட்டமைக்கப்பட்டுள்ள இறை இயற்றுதலுக்குரிய சான்றான அற்புதக் கணிதக் குறியீட்டின் ஒரு முக்கிய அங்கமாக அமைகின்றன. பார்க்க பின் இணைப்பு 1.

13:2. கடவுள்தான் நீங்கள் காணக்கூடிய தூண்கள் எதுவுமின்றி வானங்களை உயர்த்திய ஒருவர், பின்னர் அனைத்து அதிகாரங்களையும் ஏற்றுக் கொண்டார். சூரியன் மற்றும் சந்திரன் ஒவ்வொன்றையும் முன்னரே தீர்மானிக்கப்பட்ட ஒரு காலத்திற்கு (அவற்றின் வட்டவரைக்குள்) ஓடும்படி அவர் ஆக்கினார். அவர் எல்லா விஷயங்களையும் கட்டுப்படுத்துகிறார், மேலும் இவ்வெளிப்பாடுகளை விவரிக்கின்றார், உங்கள் இரட்சகரைச் சந்திப்பது குறித்து நீங்கள் உறுதிப்பாட்டினை அடையும் பொருட்டு.

13:3. அவர்தான் பூமியை நிர்மாணித்து, மேலும் அதன் மேல் மலைகளையும் ஆறுகளையும் அமைத்தவர். மேலும் வெவ்வேறுபட்ட கனிவர்க்கங்களிலிருந்து, அவர் அவற்றை ஜோடிகளாக - ஆண்கள் மற்றும் பெண்ணினங்களாக்கினார். இரவு பகலை முந்துகின்றது. சிந்திக்கும் மக்களுக்கு இவை திடமான சான்றுகளாகும்.

13:4. பூமியின் மீது, திராட்சைப் பழத்தோட்டங்களையும் பயிர்களையும் பேரீத்த மரங்களையும் - கொட்டைகள் கொண்டவை, கொட்டைகள் இல்லாதவை-விளைவிக்கும் நிலங்கள் அருகருகே உள்ளன. அவை ஒரே நீரைக் கொண்டு பாசனம் செய்யப்பட்ட போதிலும், உண்ணுவதற்கு சிலவற்றை விட மேலாக நாம் மற்றவற்றைத் தேர்ந்தெடுத்திருக்கின்றோம். புரிந்து கொள்ளும் மக்களுக்கு இவை திடமான சான்றுகளாகும்

13:5. எதற்காகவாவது நீர் வியப்படைவீராயின், உண்மையான வியப்பு அவர்களுடைய இக்கூற்றுத்தான்: "நாம் தூசியாக மாறிய பின்னர், நாம் புதிதாக மீண்டும் படைக்கப்படுவோமா?" இவர்கள் தான் தங்கள் இரட்சகரை நம்பமறுத்தவர்கள். இவர்கள் தான் தங்கள் கழுத்துகளைச் சுற்றி தளைகளுக்கு உள்ளானவர்கள். இவர்கள்தான் நரகிற்கு உள்ளானவர்கள், அங்கே அவர்கள் நிரந்தரமாகத் தங்கியிருப்பார்கள்.

13:6. நல்லவர்களாக மாறிவிடுவதற்குப் பதிலாக, தங்கள் மீது அழிவைக் கொண்டு வருமாறு அவர்கள் உம்மிடம் சவால்விடுகின்றனர். கடந்த காலங்களில் போதுமான முன்னுதாரணங்கள் அவர்களுக்காக அமைக்கப்பட்டுள்ளன. நிச்சயமாக, உம்முடைய இரட்சகர், அவர்களுடைய வரம்புமீறல்கள் இருந்த போதிலும், மனிதர்கள்பால் முற்றிலும் மன்னிப்பு கொண்டவராக உள்ளார், மேலும் உம்முடைய இரட்சகர் தண்டனையை அமல்படுத்துவதிலும் கண்டிப்பானவர்.

13:7. நம்பமறுப்போர் கூறுகின்றனர், "அவருடைய இரட்சகரிடமிருந்து அவருக்கு ஓர் அற்புதம் மட்டும் இறங்கி வரக்கூடுமானால் (அப்போது நாங்கள் நம்பிக்கை கொள்வோம்)." நீர் ஒரு எச்சரிப்பவர் மட்டுமே - ஒவ்வொரு சமூகமும் வழிகாட்டும் ஓர் ஆசிரியரைப் பெற்றுக் கொள்கின்றது.

13:8. ஒவ்வொரு பெண்ணினமும் சுமப்பதையும், மேலும் ஒவ்வொரு கருப்பையும் வெளியேற்றுவதையும், அடைந்து கொள்வதையும் கடவுள் அறிகின்றார். அவர் செய்யும் ஒவ்வொன்றும் மிகச் சரியாக அளவிடப்பட்டுள்ளது.

13:9. அனைத்து இரகசியங்களையும், அறிவிப்புகளையும் அறிந்தவர்; மேலதிகாரம் கொண்டவர், மிகவும் உயர்வானவர்.

13:10. உங்களுடைய எண்ணங்களை நீங்கள் மறைத்துக் கொண்டாலும், அல்லது அவற்றை வெளிப்படுத்தினாலும், அல்லது இரவின் இருளில் மறைந்திருந் தாலும் அல்லது பகலின் வெளிச்சத்தில் செயல்பட்டாலும் அது ஒன்றே ஆகும்.

13:11. உங்கள் ஒவ்வொருவருடனும் இருக்கும் (வானவர்களின்) அணிகள் மாறி மாறி முறைகள் எடுத்துக் கொள்கின்றன-அவர்கள் உங்களுக்கு முன்புறமும் உங்களுக்குப் பின்புறமும் உள்ளனர். அவர்கள் உங்களுடன் இருக்கின்றனர், மேலும் கடவுள்-ன் கட்டளைகளுக்கு ஏற்ப உங்களைப் பாதுகாக்கின்றனர். இவ்விதமாக, எந்த மக்களின் நிலையையும், மாற்றிக்கொள்ளும் முடிவை அவர்களே செய்தால் அன்றி, கடவுள் மாற்றுவதில்லை. எந்தச் சமூகத்திற்கும் ஏதேனும் கஷ்டத்தைக் கடவுள் நாடிவிட்டால், எந்தச் சக்தியும் அதனைத் தடுத்து விட முடியாது. ஏனெனில் அவரை அன்றி அவர்களுக்கு அதிபதியாகவோ எஜமானவராகவோ எவரும் இல்லை.

13:12. அவர்தான் அச்சத்திற்கும் அதே சமயம் எதிர்பார்ப் பிற்கும் மூலாதாரமாக மின்னலை உங்களுக்குக் காட்டுபவர், மேலும் கனத்த மேகங்களையும் அவர் துவக்குகின்றார்.

13:13. இடியோசை அவருடைய மகிமையைப் புகழ்கின்றது, மேலும் அவர் மீதுள்ள பக்தியால் வானவர்களும் அவ்வாறே செய்கின்றனர். அவருடைய நாட்டத்திற் கேற்பத்தாக்குகின்ற, மின்னல் அம்புகளை அவர் அனுப்புகின்றார். இருப்பினும், அவர்கள் கடவுள் -ஐப் பற்றித் தர்க்கிக்கின்றனர், அவருடைய சக்தி அச்சமூட்டக் கூடியதாக இருந்த போதிலும்.

13:14. அவரை இறைஞ்சுவது மட்டுமே முறையான வேண்டுதலாகும், அதே சமயம் அவரை அன்றி அவர்கள் இறைஞ்சும் போலித்தெய்வங்கள் , எவ்விதத்திலும் பதிலளிக்க இயலாது. எனவே, அவர்கள் தண்ணீரை நோக்கித் தங்கள் கைகளை நீட்டிக் கொள்பவர்களைப் போன்றவர்கள், ஆனால் அவர்களுடைய வாய்களை எதுவும் அடைவதில்லை. நம்பமறுத்தவர்களின் வேண்டுதல்கள் வீணாகிப் போனவையே ஆகும்.

13:15. வானங்களிலும் பூமியிலும் உள்ள ஒவ்வொருவரும், விரும்பியோ விரும்பாமலோ கடவுள்-க்குச் சிரம் பணிகின்றனர், மேலும் அவர்களுடைய நிழல்களும், காலைகளிலும் மாலைகளிலும் அவ்வாறே செய்கின்றன.*

*13:15 நம்பமறுப்பவர்கள் கூட சிரம் பணிகின்றனர்; உதாரணத்திற்கு, அவர்களால் தங்களுடைய இதயத்துடிப்பையோ, நுரையீரலையோ, அல்லது குடல்களின் இயக்கத்தையோ கட்டுப்படுத்த இயலாது. சூரியன் மற்றும் சந்திரனின் சுற்றுப்பாதை, மேலும் நான்கு பருவகாலங்களுக்குக் காரணமாக அமையும் பூமிக்கிரகத்தின் விசேஷ வடிவம் ஆகியவற்றைக் கடவுள் வடிவமைத்த விதத்தால் நிழல்கள் முன்னரே தீர்மானிக்கப்பட்டுள்ளன. சூரியக் கடிகாரங்களும், அவற்றின் நிழல்களும் கண்டுபிடிக்கப்பட்டதன் மூலம் சூரிய / பூமி உறவின் நேர்த்திமிகு நுட்பம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

13:16. கூறும், "வானங்களுக்கும் பூமிக்கும் இரட்சகராக இருப்பவர் யார்?" கூறும், "கடவுள்." கூறும், "பின்னர் ஏன் நீங்கள் தங்களுக்கே கூட நன்மையோ தீமையோ செய்து கொள்ளச் சக்தியற்றவர்களை அவருடன் எஜமானர்களாக அமைத்துக் கொள்கின்றீர்கள்?" கூறும், "குருடனும் பார்வையுடையவனும் ஒன்றாவார்களா? இருளும் ஒளியும் ஒன்றாகுமா?" கடவுள்-ஐ அன்றி அவருடைய படைப்புகளுக்கு ஒப்பான படைப்புக்களை, இரு படைப்புகளுக்கும் வேறுபாடு காண முடியாத அளவுக்குப் படைத்திருக்கும் போலித் தெய்வங்களை அவர்கள் கண்டு விட்டனரா? கூறும், "கடவுள்தான் அனைத்துப் பொருட்களின் படைப்பாளர், மேலும் அவர்தான் ஒருவர், மேலதிகாரம் கொண்டவர்."

13:17. விண்ணிலிருந்து தண்ணீரை அவர் இறக்கி அனுப்புகின்றார், அதன்மூலம் பள்ளத்தாக்குகள் நிரம்பி வழிகின்றன, பின்னர் அந்த நீர்ப்பிரவாகம் அபரிமிதமான நுரையை உருவாக்குகின்றது. அதுபோலவே, அவர்களுடைய ஆபரணங்களுக்காகவோ சாதனங்களுக்காகவோ உலோகங்களைச் சுத்தி செய்ய அவர்கள் நெருப்பைப் பயன்படுத்தும் போதும் நுரை உருவாகின்றது. கடவுள் இவ்விதமாக சத்தியத்திற்கும் அசத்தியத்திற்கும் உவமானங்கள் எடுத்துரைக்கின்றார். அந்த நுரையைப் பொறுத்தவரை அது வீணாகிப் போகின்றது, அதே சமயம் மனிதர்களுக்குப் பயன் தருவதோ மண்ணுக்கு நெருக்கமாகத் தங்கி விடுகின்றது. கடவுள் இவ்விதமாக உவமானங்களை எடுத்துரைக்கின்றார்.

13:18. தங்கள் இரட்சகருக்கு மறுமொழி தருபவர்கள் நல்ல வெகுமதிகளுக்குத் தகுந்தவர்களாகின்றனர். அவருக்கு மறுமொழி தரத் தவறிவிட்டவர்களைப் பொறுத்தவரை, பூமியில் உள்ள ஒவ்வொன்றையும் அவர்கள் சொந்தமாகக் கொண்டிருந்தாலும் - அது போல் இரு மடங்கானாலும் - அவர்கள் உடனடியாக அதனை ஈட்டுத் தொகையாகத் தந்து விடுவார்கள். அவர்கள் மோசமான கேள்விக் கணக்கிற்கு உள்ளாகி விட்டனர், மேலும் அவர்களுடைய இறுதித் தங்குமிடம் நரகமாகும்; எத்தகையதொரு துக்ககரமான விதி.

13:19. உமக்குக் கொடுக்கப்பட்ட உம்முடைய இரட்சகரின் வெளிப்பாடுகளைச் சத்தியம் என அடையாளம் கண்டு கொண்டஒருவன், குருடனாக இருக்கும் ஒருவனுக்குச் சமமாவானா? அறிவுடையோர் மட்டுமே கவனத்தில் எடுத்துக் கொள்வார்கள்.

13:20. அவர்கள்தான் கடவுள்-யிடம் செய்த வாக்குறுதிகளை நிறைவேற்றுபவர்கள், மேலும் உடன்படிக்கைகளை மீறாதவர்கள்.

13:21. சேர்த்து வைக்குமாறு கடவுள் கட்டளையிட்டவற்றை அவர்கள் சேர்த்து வைப்பார்கள், தங்கள் இரட்சகரிடம் பயபக்தியோடிருப்பார்கள், மேலும் அச்சுறுத்தும் கேள்விக்கணக்கை அஞ்சுவார்கள்.

13:22. தங்கள் இரட்சகரைத் தேடுவதில் உறுதியோடு சகித்திருப்பார்கள், தொடர்புத் தொழுகைகளைக் (ஸலாத்) கடைப்பிடிப்பார்கள், நம் வாழ்வாதாரங்களில் அவர்களுக்குரியதில் இருந்து இரகசியமாகவும் பகிரங்கமாகவும் செலவு செய்வார்கள், மேலும் நல்லதைக் கொண்டு கெட்டதை எதிர் கொள்வார்கள். இவர்கள் மிகச்சிறந்த தங்குமிடத்திற்குத் தகுதி பெற்று விட்டார்கள்.

13:23. தங்கள் பெற்றோர்களிலும், தங்கள் துணைகளிலும், தங்கள் பிள்ளைகளிலும் உள்ள நல்லோர்களுடன் சேர்ந்து, அவர்கள் ஏதேன் தோட்டங்களில் நுழைவார்கள். ஒவ்வொரு வாயிலின் வழியாகவும் வானவர்கள் அவர்களிடம் வருவார்கள்.

13:24. "நீங்கள் உறுதியோடு சகித்துக்கொண்டு இருந்ததனால் உங்கள் மீது சாந்தி நிலவுவதாக. எத்தகையதொரு ஆனந்தமான விதி."

13:25. கடவுள்-ன் உடன்படிக்கையைக் காப்பதாக வாக்குறுதி செய்து விட்டுப் பின்னர் அதனை மீறுபவர்கள், மேலும் சேர்த்து வைக்குமாறு கடவுள் கட்டளையிட்டவற்றைத் துண்டிப்பவர்கள், மேலும் தீமையைச் செய்பவர்ளைப் பொறுத்தவரை, அவர்கள் கண்டனத்திற்கு உள்ளாகி விட்டார்கள்; அவர்கள் மோசமான விதிக்கு உள்ளாகி விட்டார்கள்.

13:26. கடவுள்தான் அவர் நாடியோருக்கு வாழ்வாதாரத்தை அதிகரிக்கவோ அல்லது அதனை நிறுத்தி வைத்துக் கொள்ளவோ செய்கின்ற ஒருவர். இந்த வாழ்வில் மூழ்கியவர்களாக அவர்கள் ஆகி விட்டனர், மேலும் இந்த வாழ்வு, மறுவுலகுடன் ஒப்பிடப்படும் போது, ஒன்றுமேயில்லை.

13:27. நம்பமறுப்போர் கூறுவார்கள், "அவருடைய இரட்சகரிடமிருந்து அவருக்கு ஓர் அற்புதம் மட்டும் இறங்கி வரக்கூடுமானால் (நாங்கள் நம்பிக்கை கொள்வோம்)." கூறும், "தான்நாடுகின்ற எவரையும் கடவுள் வழிகேட்டில் அனுப்பி விடுகின்றார், மேலும் கீழ்ப்படி வோருக்கு மட்டுமே அவர் தன்பால் வழி காட்டுகின்றார்."

13:28. கடவுள்-ஐ நினைப்பதில் களிப்படைகின்ற இதயங்கள் கொண்டவர்கள் அவர்கள்தான். ஆம், நிச்சயமாகக் கடவுள்-ஐ நினைப்பதன் மூலமே, இதயங்கள் களிப்படைகின்றன.

13:29. நம்பிக்கை கொண்டு மேலும் நேரியதொரு வாழ்வு நடத்துவோர் மகிழ்ச்சிக்கும் ஆனந்தமானதோர் விதிக்கும் தகுதியாகி விட்டனர்.

13:30. (ரஷாதே)* கடந்தகாலத்தில் மற்றச் சமுதாயங்களுக்கு நாம் செய்ததைப் போலவே இந்தச் சமுதாயத்திற்கு உம்மை நாம் அனுப்பி உள்ளோம். நாம் உமக்கு வெளிப்படுத்துபவற்றை நீர் அவர்களிடம் எடுத்துரைக்க வேண்டும், ஏனெனில் அவர்கள் மிக்க அருளாளரை நம்பமறுத்து விட்டனர். கூறும், "அவரே என் இரட்சகர். அவரைத் தவிர இறைவன் இல்லை. நான் அவரிடம் மட்டுமே என் பொறுப்பை ஒப்படைக் கின்றேன்; என் இறுதி விதி அவரிடமே உள்ளது."

*13:30 "ரஷாத்" தின் எழுத்தெண் மதிப்பையும் (505), "கலீஃபா" வின் எழுத்தெண் மதிப்பையும் (725), அத்தியாய எண்ணையும் (13), வசன எண்ணையும் (30), நாம் கூட்டினால் நமக்குக் கிடைப்பது 505+725+13+30=1273=19x67. கடவுள் இவ்விதமாகத் தனது தூதரின் பெயரைக் குறிப்பிடுகின்றார். (விபரங்களுக்குப் பார்க்க பின் இணைப்பு 2).

13:31. ஒரு குர்ஆன் கொண்டு மலைகளை நகரச் செய்த போதிலும், அல்லது பூமியைத் துண்டுகளாகப் பிளந்தாலும், அல்லது இறந்தவர்களைப் பேசச் செய்தாலும் (அவர்கள் நம்பிக்கை கொள்ளமாட்டார்கள்). கடவுள் அனைத்து விஷயங்களையும் கட்டுப்படுத்துகின்றார். கடவுள் நாடியிருந்தால், எல்லா மக்களையும் அவர் நேர்வழியில் நடத்தியிருக்க முடியும் என்பதை உணர்ந்து நம்பிக்கையாளர்கள் விலகிக் கொண்டு விட வேண்டிய நேரம் இதுவல்லவா? நம்பிக்கை கொள்ள மறுப்பவர்கள், அவர்களுடைய சொந்தச் செயல்களின் விளைவாகக் கடவுள்-ன் வாக்குறுதி நிறைவேறும்வரை, தொடர்ந்து பேரழிவுகளை அனுபவிப்பார்கள், அல்லது அவர்களுக்கு அருகில் பேரழிவுகள் தாக்கக் காண்பார்கள். முன்னரே தீர்மானிக் கப்பட்ட விதியைக் கடவுள் ஒருபோதும் மாற்றுவதில்லை

13:32. உமக்கு முன்னிருந்த தூதர்களும் கேலி செய்யப் பட்டனர்; நம்பமறுப்பவர்களை நான் தொடர அனுமதித்தேன், பின்னர் அவர்களை நான் தண்டித்தேன். என் தண்டனை எவ்வளவு பயங்கரமானதாக இருந்தது!

13:33. ஒவ்வொரு தனி ஆத்மாவையும் கட்டுப்படுத்தும் அந்த ஒருவருக்கு நிகராக எவரேனும் உள்ளாரா? ஆயினும், அவர்கள் கடவுள்-க்குப் போட்டியாக போலித் தெய்வங்களை அமைத்துக் கொள்கின்றனர். கூறும், "அவற்றின் பெயர்களைக் கூறுங்கள். பூமியின் மீது அவர் அறியாத சிலவற்றை அவருக்கு நீங்கள் தெரியப்படுத்துகின்றீர்களா? அல்லது வெற்று வாசகங்களைப் புனைகின்றீர்களா?" உண்மையில், நம்பமறுப்பவர்களின் சூழ்ச்சிகள் அவர்களுடைய கண்களுக்கு அழகாக்கப்பட்டுள்ளன. இவ்விதமாக அவர்கள் நேரான பாதையிலிருந்து திருப்பப்பட்டு விடுகின்றனர். கடவுள்-ஆல் வழிகேட்டிற்கு அனுப்பப்பட்டவர்கள் வழிகாட்டும் ஓர் ஆசிரியரை ஒருபோதும் காணமுடியாது."

13:34. இந்த வாழ்வில் அவர்கள் தண்டனைக்கு உள்ளாகி விட்டனர், மேலும் மறுவுலகின் தண்டனையோ மிகவும் மோசமானதாக உள்ளது. கடவுள்-க்கெதிராக எந்த ஒன்றும் அவர்களைக் காப்பாற்றி விட முடியாது

13:35. நல்லோர்களுக்கு வாக்களிக்கப்பட்டிருக்கும் சுவனத்தின் உருவகமாவது, பாயும் ஆறுகள், தீர்ந்து போகாத வாழ்வாதாரங்கள், மற்றும் குளிர்ந்த நிழல். நன்னெறியைக் கடைப்பிடிப்போருக்கு உரிய விதி இத்தகையதேயாகும், அதே சமயம் நம்பமறுப்போருக்குரிய விதியோ நரகமாகும்

13:36. வேதத்தைப் பெற்றவர்கள் உமக்கு வெளிப்படுத்தப் பட்டவற்றில் ஆனந்தம் அடைகின்றனர்; மற்ற சிலர் இதன் பகுதிகளை ஏற்றுக்கொள்ள மறுக்கக் கூடும். கூறும், கடவுள்-ஐ வழிபட வேண்டும் என்றும், மேலும் அவருடன் போலித் தெய்வங்கள் எதனையும் கூடச் சேர்த்துக் கொள்ளக்கூடாது என்றும் நான் கட்டளையிடப்பட்டுள்ளேன், அவ்வளவு தான். நான் அவர் பால் அழைக்கின்றேன், மேலும் என் இறுதி விதி அவரிடமே உள்ளது.

13:37. இந்தச் சட்டங்களை நாம் அரபியில் வெளிப்படுத்தினோம், மேலும் இந்த அறிவு உமக்கு வந்து விட்ட பின்னர், அவர்களுடைய விருப்பங்களுக்கு நீர் எப்போதாவது இடம் கொடுப்பீராயின், கடவுள்-க்கெதிராக உமக்கு தோழரோ, அல்லது பாதுகாவலரோ இருக்க மாட்டார்.

*13:37-38 இவ்வசனத்தின் எண்(38)=19x2. (13:37-38) க்குப் பக்கத்தில் "ரஷாத்" தின் எழுத்தெண் மதிப்பையும் (505) "கலீஃபா" வின் எழுத்தெண் மதிப்பையும் (725) வைக்கும்போது 505725133738 என்ற எண் கிடைக்கப் பெறுகின்றது. 505725133738= 19x26617112302 (பின் இணைப்பு 2).

13:38. (ரஷாதே), உமக்கு முன்னரும் நாம் தூதர்களை அனுப்பி இருக்கின்றோம், மேலும் மனைவியரும் பிள்ளைகளும் கொண்ட கணவர்களாக அவர்களை நாம் ஆக்கினோம். கடவுள்-ன் அங்கீகாரமின்றி, மேலும் குறிப்பிடப்பட்ட, முன்னரே தீர்மானிக்கப்பட்ட ஒரு நேரத்திற்கு ஒப்பவேயன்றி எந்தத் தூதரும் ஓர் அற்புதத்தைக் கொண்டு வர இயலாது.

13:39. தான் நாடிய எதையும் கடவுள் துடைத்து எடுத்து விடுகின்றார், மேலும் நிலைப்படுத்துகின்றார். அசல் மூலப்பிரதி அவரிடமே உள்ளது.

13:40. அவர்களுக்கு நாம் வாக்களித்ததை உமக்கு நாம் காட்டினாலும் சரி, அல்லது அதற்கு முன்னர் உம் வாழ்வை முடித்து விட்டாலும் சரி, உமது ஒரே பணி (தூதுச் செய்தியைச்) சேர்ப்பிப்பதே. அவர்களைக் கணக்குக் கேட்க அழைக்கப் போவது நாம்தான்.

13:41. பூமியின் மீது ஒவ்வொரு நாளும், அவர்களை முடிவினை நோக்கி நெருக்கிக் கொண்டு வருவதையும், மாற்றிவிட முடியாதபடி அவர்களுடைய வாழ்க்கைத் தவணையைக் கடவுள் தீர்மானிக்கின்றார் என்பதையும் அவர்கள் காணவில்லையா? அவர்தான் மிகத் திறன் வாய்ந்த கணக்காளர்.

13:42. அவர்களுக்கு முன்னர் இருந்த மற்றவர்களும் சூழ்ச்சி செய்தனர், ஆனால் இறுதியான திட்டம் கடவுள்-க்குரியது. ஒவ்வொருவரும் செய்வதை அவர் அறிகின்றார். இறுதி வெற்றியாளர்கள் யார் என்பதை நம்பமறுப்பவர்கள் கண்டு கொள்வார்கள்.

13:43. நம்பமறுத்தவர்கள் கூறுவார்கள், "நீர் ஒரு தூதரல்லர்! " கூறும், "உங்களுக்கும் எனக்கும் இடையில் சாட்சியாகக் கடவுள்-ம், வேதத்தின் அறிவைப் பெற்றிருப்பவர்களும் போதுமானவர்கள்."