Jesus
The Quran, informs us that Jesus was a human messenger of God whose sole mission was to deliver God's message; he never possessed any power, and is now dead (4:171, 5:75, 5:117). Those who consider Jesus to be God, or Son of God, or part of a trinity are "pagans" (5:17, 5:72, 5:73). Outstanding Christian scholars have reached these same conclusions (THE MYTH OF GOD INCARNATE, John Hick, ed., The Westminster Press, Philadelphia, 1977 & THE MYTH MAKER, Hyam Maccoby,Harper & Row 1986). Christianity is the product of Nicene (AD 325).
The Bible's Jesus
Jesus proclaimed aloud: ``Whoever puts faith in me believes not so much in me as in him who sent me; ..... For I have not spoken on my own; no, the Father who sent me has commanded me what to say and how to speak. Since I know that his commandment means eternal life, whatever I say is spoken just as he instructed me.''
[ John 12:44-50 ]
"I cannot do anything of myself. I judge as I hear, and my judgment is honest because I am not seeking my own will but the will of him who sent me."
[ John 5:30 ]
Jesus said: ``My doctrine is not my own; it comes from him who sent me.''
[ John 7:16 ]
"Men of Israel, listen to me! Jesus the Nazorean was a man whom God sent to you with miracles, wonders, and signs as his credentials. These God worked through him in your midst, as you well know."
[ Acts 2:22 ]
``...The man who hears my word and has faith in him who sent me possesses eternal life.''
[ John 5:24 ]
"Whoever welcomes me welcomes, not me, but him who sent me."
[ Matthew 10:40, Mark 9:37, Luke 9:48, & John 13:20 ]
``...I have not come of myself. I was sent by One who has the right to send, and him you do not know. I know him because it is from him I come; he sent me.''
[ John 7:28-29 ]
Jesus looked up to heaven and said, ``...Eternal life is this: to know you, the only true God, and him whom you have sent, Jesus Christ.''
[ John 17:1-3 ]
All who are led by the Spirit of God are sons of God.
[ Romans 8:14 ]
Jesus looked upward and said, ``Father, I thank you for having heard me. I know that you always hear me but I have said this for the sake of the crowd, that they may believe that you sent me.''
[ John 11:41-42 ]
As he was setting out on a journey a man came running up, knelt down before him and asked, ``Good Teacher, what must I do to share in everlasting life?'' Jesus answered, ``Why do you call me good? No one is good but God alone.''
[ Mark 10:17-18 ]
``None of those who call me `Lord' will enter the kingdom of God, but only the one who does the will of my Father in heaven."
[ Matthew 7:21 ]
``...Go to my brothers and tell them, `I am ascending to my Father and your Father, to my God and your God.' ''
[ John 20:17 ]
``God is my Lord and your Lord; you shall worship Him alone. This is the right path."
[ Quran 3:51, 19:36, & 43:64 ]
Trinity, the doctrine of God taught by Christians that asserts that God is one in essence but three in ``person,'' Father, Son, and Holy Spirit. Neither the word Trinity, nor the explicit doctrine as such, appears in the New Testament, nor did Jesus and his followers intend to contradict the Shema in the Old Testament: ``Hear O Israel: The Lord our God is one'' (Deut. 6:4).
[ Encyclopedia Britannica, 1975 ]
Jesus' Death
This has been the single most controversial subject in the world. The Quran's miraculous mathematical code has now provided the final answer to this topic:
Jesus' soul was raised, i.e., he was put to death prior to the arrest and crucifixion of his body. Thus, his persecutors arrested, tortured, and crucified an empty body - Jesus was already gone to the world of souls (3:55, 4:157).
[Quran 3:54] They plotted and schemed, but so did God, and God is the best schemer.
[Quran 3:55] Thus, God said, "O Jesus, I am terminating your life, raising you to Me, and ridding you of the disbelievers. I will exalt those who follow you above those who disbelieve, till the Day of Resurrection. Then to Me is the ultimate destiny of all of you, then I will judge among you regarding your disputes.
[Quran 4:157] And for claiming that they killed the Messiah, Jesus, son of Mary, the messenger of God. In fact, they never killed him, they never crucified him - they were made to think that they did. All factions who are disputing in this matter are full of doubt concerning this issue. They possess no knowledge; they only conjecture. For certain, they never killed him.
Mercifully, God has given our generation a living example of a person whose soul departed this world, but his body continued to live for 19 months. On November 25, 1984, doctors at the Humana Hospital of Louisville, Kentucky removed the diseased heart of Mr. William Schroeder and replaced it with a plastic and metal pump (THE NEW YORK TIMES, Monday, November 26, 1984).
On the 19th day after this historic operation - Thursday, December 13, 1984 - Mr. Schroeder, the soul, the real person, departed this world. Mr. Schroeder died. But his body continued to function with the artificial heart implanted in his body. The world was told that he "probably suffered a stroke" (THE NEW YORK TIMES, December 14, 1984).
Significantly, only one day before Mr. Schroeder's departure, he talked with President Ronald Reagan on national TV, and demanded that the Social Security Administration send his overdue check. He was perfectly alert. From the moment "he suffered a stroke," he did not recognize the day or time, nor his family members. In fact, Mr.Schroeder was no longer in this world.
The Gospels state clearly that the arrested body of Jesus was oblivious to the events surrounding it:
The chief priests, meanwhile, brought many accusations against Jesus. Pilate interrogated him again: "Surely you have some answer? See how many accusations they are leveling against you." But greatly to Pilate's surprise, Jesus made no further response.
[ Mark 15:3-5 ]
Herod was extremely pleased to see Jesus. From the reports about him he had wanted for a long time to see him, and he was hoping to see him work some miracles. He questioned Jesus at considerable length, but Jesus made no response. The chief priests and scribes were at hand to accuse him vehemently. Herod and his guards then treated him with contempt and insult.
[ Luke 23:8-11 ]
The Savior said to me, "He whom you saw on the tree, glad and laughing, this is the living Jesus. But this one into whose hands and feet they drive the nails is the fleshly part.
[Apocalypse of Peter, VII, 3, 81] from THE NAG HAMMADI LIBRARY (Harper & Row, 1977, James M.Robinson, ed, Page 339).
The facts that
ஜீஸஸ்
கடவுளின் தூதுச் செய்தியைச் சேர்ப்பிப்பதையே ஒரே இறைப்பணியாகக் கொண்டிருந்த ஜீஸஸ் கடவுளின் ஒரு மானிடத் தூதராக இருந்தார் என இக்குர்ஆன் நமக்குத் தெரிவிக்கின்றது; அவர் ஒருபோதும் எந்தச் சக்தியையும் பெற்றிருக்கவில்லை, அத்துடன் இப்போது அவர் இறந்து விட்டவராகவும் உள்ளார் (4:171, 5:75, 117). ஜீஸஸைக் கடவுள் ஆகவோ, அல்லது கடவுளின் மகனாகவோ, அல்லது திரித்துவத்தில் ஒரு அங்கமானவர் என்றோ கருதுகின்றவர்கள் "நம்பிக்கையற்றவர்கள்" ஆகவே உள்ளனர் (5:17,72,73). மிகப் பிரபலமான கிறிஸ்துவ அறிஞர்கள் இதே இந்த முடிவுக்கு வந்திருக்கின்றனர் (1977-ல் ஃபிலடெல்ஃபியாவின் வெஸ்ட் மினிஸ்டர் அச்சக வெளியீடான, ஜான் ஹிக் எழுதிய THE MYTH OF GOD INCARNATE (கடவுளின் அவதாரம் எனும் மாயை] & 1986ல் ஹர்ப்பர் & ரோ வெளியிட்ட, ஹயாம் மக்கோபி எழுதிய THE MYTH MAKER (மாயையை உருவாக்குபவர்]. கிறிஸ்துவம் நைசீனின் வினைவேயாகும் (கி. பி 325).
பைபிளின் ஜீஸஸ்
அப்போழுது ஜீஸஸ் சத்தமிட்டு: என்னிடத்தில் விசுவாசமாயிருக்கின்றவன் என்னிடத்தில் அல்ல, என்னை அனுப்பினவரிடத்தில் விசுவாசமாயிருக்கின்றாள்;.... ஏனெனில் நான் சுயமாய்ப் பேசவில்லை. நான் பேச வேண்டியது இன்னதென்றும் உபதேசிக்க வேண்டியது இன்னதென்றும் என்னை அனுப்பின பிதாவே எனக்குக் கட்டளையிட்டார். அவருடைய கட்டளை நித்திய ஜீவனாயிருக்கிறதென்று அறிவேன்; ஆகையால் நான் பேசுகிறவைகளை பிதா எனக்குச் சொன்னபடியே பேசுகிறேன் என்றார். (யோவான் 12:44-50).
நான் என் சுயமாய் ஒன்றுஞ்செய்கிறதில்லை; நான் கேட்கிறபடியே நியாயந் தீர்க்கிறேன்; எனக்குச் சித்தமானதை நான் தேடாமல் என்னை அனுப்பின பிதாவுக்குச் சித்தமானதையே நான் தேடுகிறபடியால் என் தீர்ப்பு நீதியாயிருக்கின்றது. (யோவான் 5:30)
ஜீஸஸ் அவர்களுக்குப் பிரதியுத்தாராமாக என் உபதேசம் என்னுடையதாயிராமல், என்னை அனுப்பினவருடையதாயிருக்கின்றது. (யோவான் 7:16)
இஸ்ரவேலரே, நான் சொல்லும் வார்த்தைகளைக் கேளுங்கள்; நீங்கள் அறிந்திருக்கிறபடி நசரேயனாகிய ஜீஸ்ஸைக் கொண்டு தேவன் உங்களுக்குள்ளே பலத்த செய்கைகளையும், அற்புதங்களையும் அடையாளங்களையும் நடப்பித்து அவைகளினாலே அவரை உங்களுக்கு வெளிப்படுத்தினார். (நடபடிகள் 2:22)
".......என் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பிளவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு". (யோவான் 5:24)
".....என்னை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை அனுப்பினவரை ஏற்றுக்கொள்ளுகிறான்." (மத்தேயு 10:40, மாற்கு 9:37 லூக்கா 9:48, & யோவான் 13:20)
".....நான் என் சுயமாய் வரவில்லை, என்னை அனுப்பினவர் சத்தியமுள்ளவர், அவரை நீங்கள் அறியாதிருக்கிறீர்கள், நான் அவரால் வந்திருக்கிறபடியினாலும், அவர் என்னை அனுப்பியிருக்கிற படியினாலும், நானே அவரை அறிந்திருக்கிறேன்". என்றார். (யோவான் 7:28-29)
ஜீஸஸ் தம்முடைய கண்களை வானத்திற்கு ஏறெடுத்துக் கூறினார், "...நித்திய ஜீவன் இதுவேயாகும்: ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய ஜீஸஸ் க்றைஸ்டையும் அறிவதே. (யோவான் 17:1-3)
எவர்கள் தேவனுடைய ஆவியினாலே நடத்தப்படுகிறார்களோ அவர்கள் தேவனுடைய புத்திரராயிருக்கிறார்கள் (ரோமர்கள் 8:14)
ஜீஸஸ் தம்முடைய கண்களை ஏறெடுத்து: “பிதாவே, நீர் எனக்குச் செவிகொடுத்தபடியினால் உம்மை ஸ்தோத்திரிக்கின்றேன். நீர் எப்பொழுதும் எனக்குச் செவி கொடுக்கின்றீர் என்பதை நான் அறிந்திருக்கிறேன்: ஆனாலும் நீர் என்னை அனுப்பினதைச் சூழ்ந்து நிற்கும் ஜனங்கள் விசுவாசிக்கும்படியாக அவர்கள் நிமித்தம் இதைச் சொன்னேன்" என்றார். (யோவான் 11:41-42)
பின்பு அவர் புறப்பட்டு வழியிலே போகையில், ஒருவன் ஓடிவந்து, அவருக்கு முன்பாக முழங்கால்படியிட்டு "நல்ல போதகரே, நித்திய ஜீவனைச் சுதந்தரித்துக் கொள்ளும்படி நான் என்ன செய்ய வேண்டும்?" என்று கேட்டான், அதற்கு ஜீஸஸ்: “நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்? தேவன் ஒருவர் தவிர நல்லவன் ஒருவனுமில்லையே" (மாற்கு 10:17-18)
"பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தப்படி செய்கிறவனே பரலோக சாம்ராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை". [மத்தேயு 7:21]
"...நீ என் சகோதரரிடத்திற்குப் போய் என் பிதாவினிடத்திற்கும் உங்கள் பிதாவினிடத்திற்கும் என் தேவனிடத்திற்கும் உங்கள் தேவனிடத்திற்கும் ஏறிப்போகிறேன் என்று அவர்களுக்குச் சொல்லு" என்றார். (யோவான் 20:17)
"கடவுள்தான் என்னுடைய இரட்சகரும் உங்களுடைய இரட்சகரும் ஆவார்; நீங்கள் அவரை மட்டும் வழிபட வேண்டும். இதுவே சரியான பாதையாகும்." (குர்ஆன் 3:51,19:36 & 43:64)
கிறிஸ்துவர்களால் போதிக்கப்படுகின்ற கடவுள் கோட்பாடான திரித்துவம், கடவுள் சாரத்தில் ஒருவராகவும் ஆனால் சரீரத்தில் பிதா, சுதன், மற்றும் பரிசுத்த ஆவியென மூவராகவும் இருக்கின்றார் என்று அறுதியிட்டுக் கூறுகின்றது, திரித்துவம் எனும் வார்த்தையோ, அன்றி வெளிப்படையான அத்தகைய சமயக் கோட்பாடோ புதிய ஏற்பாட்டில் காணப்படவில்லை, அன்றியும் ஜீஸஸும் அவருடைய சீடர்களும் பழைய ஏற்பாட்டில் உள்ள ஷெமாவுக்கு முரண்பட எண்ணவில்லை: “கேளுங்கள் இஸ்ரவேலர்களே இரட்சகரான நம் கடவுள் ஒருவரே ஆவார்"- (உபாகமம் 6:4)
(என்சைக்ளோபீடியா பிரிட்டானிக்கா 1975]
ஜீஸஸின் மரணம்
இவ்வுலகத்தில் மிகவும் சர்ச்சைக்குரிய ஒரு விஷயமாக இதுவே இருந்து வந்துள்ளது. இக்குர்ஆனின் அற்புதமான கணிதக்குறியீடு இப்போது இந்தப் பிரச்சினைக்கு இறுதி விடையை வழங்கியுள்ளது:
ஜீஸஸின் ஆத்மா உயர்த்தப்பட்டது. அதாவது. அவருடைய உடலைக் கைது செய்து சிலுவையில் அறையப்படுவதற்கு முன்னர் அவர் மரணத்தில் ஆழ்த்தப்பட்டு விட்டார். இவ்விதமாக, அவரை வன்கொடுமை செய்தவர்கள் காலியான ஓர் உடம்பைக் கைது செய்து, சித்திரவதைப்படுத்தி, சிலுவையிலும் அறைந்தனர்-ஜீஸஸானவர் ஆன்மாக்களின் உலகத்திற்கு முன்னரே சென்று விட்டார் (3:55,4:157).
அவர்கள் சூழ்ச்சியும் திட்டங்களுமிட்டனர்,
ஆனால் கடவுளும் அவ்வாறே செய்தார்,
மேலும் கடவுள்தான் திட்ட மிடுபவர்களில் மிகச் சிறந்தவர்.
இவ்விதமாக, கடவுள் கூறினார், "ஜீஸஸே
நான் உம்மை மரணத்தில் ஆழ்த்துகின்றேன்,
அத்துடன் என்பால் உம்மை உயர்த்திக்கொள்கிறேன்;
நம்பமறுப்பவர்களிடம் இருந்து நான் உம்மை காப்பற்றுவேன்”, (குர்ஆன் 3:54-55)
மெஸையா, மேரியின் மகன், ஜீஸஸாகிய, கடவுளின் தூதரை அவர்கள்
கொன்றுவிட்டதாக அவர்கள் கோரினர்!
உண்மையில், அவர்கள் ஒருபோதும் அவரைக் கொல்லவில்லை:
அவர்கள் ஒருபோதும் அவரைச் சிலுவையில் அறைந்திடவுமில்லை:
அவர்கள் அதனைச் செய்ததாக நம்பும்படி அவர்கள் செலுத்தப்பட்டனர்.
(குர்ஆன் 4:157)
கருணை நிறைந்த விதமாக, கடவுள் நமது தலைமுறைக்கு, ஒரு நபருடைய ஆத்மா இந்த உலகத்தை விட்டு புறப்பட்டு விட்டாலும், அவருடைய உடல் 19 மாதங்கள் உயிருடன் தொடர்ந்து இருந்த. நினைவில் நிற்கின்ற ஓர் உதாரணத்தைத் தந்துள்ளார். 1984. நவம்பர் 25 அன்று கென்டக்கியிலுள்ள. லூயி வில்லியின் ஹ்யூமானா மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர்கள் வில்லியம் ஷ்ரோடர் என்பவரின் நோய்வாய்ப்பட்ட இதயத்தை நீக்கிவிட்டு ப்ளாஸ்டிக் மற்றும் உலோகக் குழாய் ஒன்றை மாற்றியமைத்தார்கள் (த நியூயார்க் டைம்ஸ், 1984, நவம்பர் 26, திங்கட்கிழமை).
சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இந்த அறுவை சிகிச்சைக்குப் பின் 19-வது நாள் அன்று- 1984, டிசம்பர் 13, வியாழக்கிழமை-ஷ்ரோடர் என்பவர், அந்த ஆத்மா, உண்மையான அந்நபர் இந்த உலகைவிட்டுப் புறப்பட்டுவிட்டார். ஷ்ரோடர் இறந்து விட்டார். ஆனால் அவருடைய உடலில் பொருத்தப் பட்டிருந்த செயற்கை இதயத்துடன் அவருடைய உடல் தொடர்ந்து இயங்கியது. அவர் "வாதத்தால் தாக்கப்பட்டிருக்கக் கூடும்" என்று இவ்வுலகத்திற்குக் கூறப்பட்டது [த நியூயார்க் டைம்ஸ், 1984, டிசம்பர் 14] குறிப்பிடத்தக்க விதமாக, ஷ்ரோடரின் புறப்பாட்டிற்கு ஒரே ஒரு நாள் முன்னர், தேசியத் தொலைக்காட்சியில் ஜனாதிபதி ரோனால்ட் ரேகளுடன் உரையாடினார், மேலும் சமூகப்பாதுகாப்பு நிர்வாகம் அவருக்குச் செலுத்த வேண்டிய காசோலையை அனுப்பவேண்டும் என்று கோரினார். அவர் பூரணமான விழிப்புடன் இருந்தார். "வாதம் ஒன்றால் அவர் தாக்கப்பட்ட" அக்கணத்தில் இருந்து, அவர் தேதியையோ அல்லது நேரத்தையோ, அன்றி அவருடைய குடும்ப அங்கத்தினர்களையோ அவர் அடையாளம் கண்டுகொள்ளவில்லை. உண்மையில், அதற்கப்பால் ஷ்ரோடர் இந்த உலகத்தில் இருக்கவில்லை.
கைது செய்யப்பட்ட ஜீஸஸின் உடலானது அதனைச் சூழ்ந்திருந்த நிகழ்வுகளை அறியாதிருந்தது என்பதை சுவிசேஷங்கள் தெளிவாகச் கூறுகின்றன:
பிரதான ஆசாரியார்கள் அவர்மேல் அநேகங்குற்றங்களைச் சாட்டினார்கள்.
அவரோ மறுப்பாக ஒன்றுசொல்லவில்லை.
அப்பொழுது பிலாத்து மறுபடியும் அவரை நோக்கி:
"இதோ இவர்கள் உன்மேல் எத்தைைனயோ குற்றங்களைச் சாட்டுகிறார்களே,
அதற்கு நீ உத்தரவு ஒன்றுஞ் சொல்லுகிறதில்லையா", என்று கேட்டான்.
ஜீஸஸோ அப்பொழுதும் உத்தரவு ஒன்றுஞ் சொல்லவில்லை:
அதனால் பிலாத்து ஆச்சர்யப்பட்டான்.
(மாற்கு 15:3-5)
ஏரோது ஜீஸஸைக் குறித்து அநேக காரியங்களைக் கேள்விப்பட்டிருந்ததினாலும், அவரால் செய்யப்படும் அடையாளத்தைப் பார்க்க வேண்டுமென்று விரும்பியிருந்ததினாலும் அவரைக் காணும்படி வெகுநாளாய் ஆசை கொண்டிருந்தான். அந்தப்படி அவரைக் கண்ட போது மிகவும் சந்தோஷப்பட்டு, அநேக காரியங்களை அவரிடம் வினாவினான். அவர் மறுமொழியாக அவனுக்கு ஒன்றுஞ்சொல்லவில்லை. அப்பொழுது ஏரோது தன் போர்சேவகரோடுகூட அவரை நிந்தித்துப் பரிகாசம் பண்ணினான். (லூக்கா 23:8-11)
மீட்பர் என்னிடம் கூறினார். “மரத்தின் மீது மகிழ்வுடனும் சிரித்தவாறும் எவரை நீ கண்டாயோ, இதுதான் உயிருள்ள ஜீஸஸாகும்", ஆனால் எவருடைய கைகளிலும் பாதங்களிலும் அவர்கள் ஆணிகளை அறைகின்றனரோ, இது மாமிசப் பகுதியேயாகும். (பேதுருவின் அருள் வெளிப்பாடு VII 3,81] நாக் ஹம்மாதியின் நூலகம் (ஹார்ப்பர் & ரோ, 1977, ஜேம்ஸ் எம்,ராபின்சன் எழுதியது, பக்கம் 339).
(1) ஷ்ரோடரின் ஆன்மாவானது அறுவை சிகிச்சைக்கு பின்னர் 19-வது நாள் அன்று புறப்பட்டது. மேலும் (2) அவருடைய உடலானது 19 மாதங்கள் உயிருடன் இருந்தது ஆகியவை, ஷ்ரோடரின் நிலைக்கும். மேலும் ஜீஸஸின் கைது. சித்திரவதை. மற்றும் அவருடைய ஆன்மாவற்ற உடலின் சிலுவையிலறைதலுக்கு முன்னர் அவர் புறப்பட்டு விட்டார் எனும் நிரூபிக்கப்பட்ட நிகழ்வு ஆகியவற்றிற்கிடையே உள்ள ஒத்தநிலையை இவ்வுலகம் அறிந்துகொள்ள வேண்டுமென கடவுள் விரும்பிய விசித்திர நினைவூட்டல்களாக உள்ளன.