Find
Chapter 79: Al-Naaze`aat
79:0-46
46 verses Revelation order 81
سورة النازعات

. ١:٧٩ وَالنّٰزِعٰتِ غَرقًا

. ٢:٧٩ وَالنّٰشِطٰتِ نَشطًا

. ٣:٧٩ وَالسّٰبِحٰتِ سَبحًا

. ٤:٧٩ فَالسّٰبِقٰتِ سَبقًا

. ٥:٧٩ فَالمُدَبِّرٰتِ أَمرًا

. ٦:٧٩ يَومَ تَرجُفُ الرّاجِفَةُ

. ٧:٧٩ تَتبَعُهَا الرّادِفَةُ

. ٨:٧٩ قُلوبٌ يَومَئِذٍ واجِفَةٌ

. ٩:٧٩ أَبصٰرُها خٰشِعَةٌ

. ١٠:٧٩ يَقولونَ أَءِنّا لَمَردودونَ فِى الحافِرَةِ

. ١١:٧٩ أَءِذا كُنّا عِظٰمًا نَخِرَةً

. ١٢:٧٩ قالوا تِلكَ إِذًا كَرَّةٌ خاسِرَةٌ

. ١٣:٧٩ فَإِنَّما هِىَ زَجرَةٌ وٰحِدَةٌ

. ١٤:٧٩ فَإِذا هُم بِالسّاهِرَةِ

. ١٥:٧٩ هَل أَتىٰكَ حَديثُ موسىٰ

. ١٦:٧٩ إِذ نادىٰهُ رَبُّهُ بِالوادِ المُقَدَّسِ طُوًى

. ١٧:٧٩ اذهَب إِلىٰ فِرعَونَ إِنَّهُ طَغىٰ

. ١٨:٧٩ فَقُل هَل لَكَ إِلىٰ أَن تَزَكّىٰ

. ١٩:٧٩ وَأَهدِيَكَ إِلىٰ رَبِّكَ فَتَخشىٰ

. ٢٠:٧٩ فَأَرىٰهُ الـٔايَةَ الكُبرىٰ

. ٢١:٧٩ فَكَذَّبَ وَعَصىٰ

. ٢٢:٧٩ ثُمَّ أَدبَرَ يَسعىٰ

. ٢٣:٧٩ فَحَشَرَ فَنادىٰ

. ٢٤:٧٩ فَقالَ أَنا۠ رَبُّكُمُ الأَعلىٰ

. ٢٥:٧٩ فَأَخَذَهُ اللَّهُ نَكالَ الـٔاخِرَةِ وَالأولىٰ

. ٢٦:٧٩ إِنَّ فى ذٰلِكَ لَعِبرَةً لِمَن يَخشىٰ

. ٢٧:٧٩ ءَأَنتُم أَشَدُّ خَلقًا أَمِ السَّماءُ بَنىٰها

. ٢٨:٧٩ رَفَعَ سَمكَها فَسَوّىٰها

. ٢٩:٧٩ وَأَغطَشَ لَيلَها وَأَخرَجَ ضُحىٰها

. ٣٠:٧٩ وَالأَرضَ بَعدَ ذٰلِكَ دَحىٰها

. ٣١:٧٩ أَخرَجَ مِنها ماءَها وَمَرعىٰها

. ٣٢:٧٩ وَالجِبالَ أَرسىٰها

. ٣٣:٧٩ مَتٰعًا لَكُم وَلِأَنعٰمِكُم

. ٣٤:٧٩ فَإِذا جاءَتِ الطّامَّةُ الكُبرىٰ

. ٣٥:٧٩ يَومَ يَتَذَكَّرُ الإِنسٰنُ ما سَعىٰ

. ٣٦:٧٩ وَبُرِّزَتِ الجَحيمُ لِمَن يَرىٰ

. ٣٧:٧٩ فَأَمّا مَن طَغىٰ

. ٣٨:٧٩ وَءاثَرَ الحَيوٰةَ الدُّنيا

. ٣٩:٧٩ فَإِنَّ الجَحيمَ هِىَ المَأوىٰ

. ٤٠:٧٩ وَأَمّا مَن خافَ مَقامَ رَبِّهِ وَنَهَى النَّفسَ عَنِ الهَوىٰ

. ٤١:٧٩ فَإِنَّ الجَنَّةَ هِىَ المَأوىٰ

. ٤٢:٧٩ يَسـَٔلونَكَ عَنِ السّاعَةِ أَيّانَ مُرسىٰها

. ٤٣:٧٩ فيمَ أَنتَ مِن ذِكرىٰها

. ٤٤:٧٩ إِلىٰ رَبِّكَ مُنتَهىٰها

. ٤٥:٧٩ إِنَّما أَنتَ مُنذِرُ مَن يَخشىٰها

. ٤٦:٧٩ كَأَنَّهُم يَومَ يَرَونَها لَم يَلبَثوا إِلّا عَشِيَّةً أَو ضُحىٰها

The Snatchers

79:1. The (angels who) snatch (the souls of the disbelievers) forcibly.

79:2. And those who gently take (the souls of the believers) joyfully.

79:3. And those floating everywhere.

79:4. Eagerly racing with one another -

79:5. to carry out various commands.

79:6. The day the quake quakes.

79:7. Followed by the second blow.

79:8. Certain minds will be terrified.

79:9. Their eyes will be subdued.

79:10. They will say, "We have been recreated from the grave!

79:11. "How did this happen after we had turned into rotten bones?"

79:12. They had said, "This is an impossible recurrence."

79:13. All it takes is one nudge.

79:14. Whereupon they get up.

79:15. Have you known about the history of Moses?

79:16. His Lord called him at the holy valley of Tuwaa.

79:17. "Go to Pharaoh; he has transgressed."

79:18. Tell him, "Would you not reform?

79:19. "Let me guide you to your Lord, that you may turn reverent."

79:20. He then showed him the great miracle.

79:21. But he disbelieved and rebelled.

79:22. Then he turned away in a hurry.

79:23. He summoned and proclaimed.

79:24. He said, "I am your Lord; most high."

79:25. Consequently, God committed him to the retribution in the Hereafter, as well as in the first life.

79:26. This is a lesson for the reverent.

79:27. Are you more difficult to create than the heaven? He constructed it.

79:28. He raised its masses, and perfected it.

79:29. He made its night dark, and brightened its morn.

79:30. He made the earth egg-shaped.*

*79:30 The Arabic word ``dahhaahaa'' is derived from ``Dahhyah'' which means ``egg.''

79:31. From it, He produced its own water and pasture.

79:32. He established the mountains.

79:33. All this to provide life support for you and your animals.

79:34. Then, when the great blow comes.

79:35. That is the day when the human will remember everything he did.

79:36. Hell will be brought into existence.

79:37. As for the one who transgressed.

79:38. Who was preoccupied with this life.

79:39. Hell will be the abode.

79:40. As for the one who reverenced the majesty of his Lord, and enjoined the self from sinful lusts.

79:41. Paradise will be the abode.

79:42. They ask you about the Hour, and when it will take place!

79:43. It is not you (Muhammad) who is destined to announce its time.

79:44. Your Lord decides its fate.

79:45. Your mission is to warn those who expect it.

79:46. The day they see it, they will feel as if they lasted one evening or half a day.

பறிப்பவர்கள்

79:1. (நம்பமறுப்போருடைய ஆன்மாக்களை) பலவந்தமாகப் பறிப்பவர்கள் (ஆகிய வானவர்கள்).

79:2. மேலும் (நம்பிக்கையாளர்களின் ஆன்மாக்களை) மகிழ்ச்சியோடு மென்மையாக எடுப்பவர்கள்.

79:3. மேலும் எல்லா இடங்களிலும் மிதக்கின்றவர்கள்.

79:4. ஆர்வத்துடன் ஒருவரையொருவர் முந்துபவர்கள்-

79:5. பல்வேறு கட்டளைகளை நிறைவேற்றுவதற்காக.

79:6. அதிர்வானது அதிரும் அந்நாள்.

79:7. இரண்டாவது ஊதுதலைத் தொடர்ந்து.

79:8. குறிப்பான சில மனங்கள் திகிலூட்டப்பட்டு விடும்.

79:9. அவர்களுடைய கண்கள் கீழ் நோக்கியவையாகி விடும்.

79:10. அவர்கள் கூறுவார்கள், "சமாதியிலிருந்து மீண்டும் நாம் படைக்கப்பட்டு விட்டோம்!

79:11. "சிதைந்து போன எலும்புகளாக நாம் மாறிவிட்ட பின்னர் எவ்வாறு இது நிகழ்ந்தது?"

79:12. அவர்கள் கூறி இருந்தனர், "இது மீண்டும் நிகழச்சாத்தியமில்லாத ஒன்றாகும்."

79:13. அதற்கு எடுத்துக் கொள்வதெல்லாம் ஒர் இடிப்பு தான்.

79:14. உடனே அவர்கள் எழுந்து விடுவார்கள்.

79:15. மோஸஸின் சரித்திரத்தைப் பற்றி நீர் அறிந்து கொண்டீரா?

79:16. துவா எனும் புனிதப்பள்ளத்தாக்கில் அவருடைய இரட்சகர் அவரை அழைத்தார்.

79:17. "ஃபேரோவிடம் செல்வீராக; அவன் வரம்புமீறி விட்டான்.

79:18. அவனிடம் கூறுவீராக, "நீ சீர்திருந்த மாட்டாயா?

79:19. "நீ பக்தியுடையவனாக மாறும் பொருட்டு, உன்னுடைய இரட்சகரிடம் உன்னை நான் வழி நடத்துவேன்."

79:20. அவர் பின்னர் அவனிடம் அந்த மாபெரும் அற்புதத்தைக் காட்டினார்.

79:21. ஆனால் அவன் நம்பமறுத்தான். மேலும் கலகம் செய்தான்.

79:22. பின்னர் அவன் ஓர் அவசரத்தில் திரும்பிச் சென்று விட்டான்.

79:23. அவன் ஒன்று திரட்டிப் பிரகடனம் செய்தான்.

79:24. அவன் கூறினான், "நான்தான் உங்களுடைய இரட்சகன்; மிகவும் உயர்ந்தவன்."

79:25. அதன் விளைவாக, மறுவுலகிலும், அவ்வண்ணமே இந்த முதல் வாழ்விலும் கடவுள் அவனைத் தண்டனைக்கு உட்படுத்தினார்.

79:26. பக்தியுடையோருக்கு இது ஒரு படிப்பினையாகும்.

79:27. படைக்கப்படுவதற்கு வானத்தை விடவும் மிகக் கடினமானவர்களா நீங்கள்? அவர் அதனை நிர்மாணித்தார்.

79:28. அதன் பருமன்களை அவர் உயர்த்தினார், மேலும் அதனைப் பூரணப்படுத்தினார்.

79:29. அதன் இரவுப் பொழுதை அவர் இருளுடையதாக்கினார், மேலும் அதன் காலைப் பொழுதை அவர் பிரகாசமானதாக்கினார்.

79:30. இந்தப் பூமியை முட்டை வடிவில்* அவர் ஆக்கினார்.

*79:30 தஹாஹா எனும் அரபி வார்த்தை முட்டை எனப் பொருள்படும் தஹ்யஹ் என்பதிலிருந்து பெறப்படுகின்றது.

79:31. அதிலிருந்தே, அதற்குரிய தண்ணீரையும் மேய்ச்சல் நிலத்தையும் அவர் உருவாக்கினார்.

79:32. மலைகளை அவர் நிலைநிறுத்தினார்.

79:33. இவை அனைத்தும் உங்களுக்கும் உங்களுடைய பிராணிகளுக்கும் வாழ்விற்கான ஆதாரங்களை வழங்குவதற்காகவேயாகும்.

79:34. பின்னர், அந்த மாபெரும் அடியானது வரும் போது.

79:35. அதுதான் மானிடனானவன் தான் செய்த ஒவ்வொன்றையும் நினைத்துப் பார்க்கின்ற நாளாகும்.

79:36. நரகம் இருப்புநிலைக்குக் கொண்டு வரப்படும்.

79:37. வரம்புமீறிவிட்ட ஒருவனைப் பொறுத்த வரை.

79:38. இந்த வாழ்வில் மூழ்கியவனாக இருந்தவன்.

79:39. நரகம்தான் இருப்பிடமாக இருக்கும்.

79:40. தன்னுடைய இரட்சகரின் மாட்சிமையை அஞ்சி, பாவகரமான மோகங்களில் இருந்து தன்னையே தடுத்துக் கொண்டவனைப் பொறுத்த வரை.

79:41. சுவனம்தான் இருப்பிடமாக இருக்கும்.

79:42. அவர்கள் அந்த வேளையைப் பற்றியும், எப்பொழுது அது நிகழ்ந்தேறும் என்றும் உம்மிடம் கேட்கின்றனர்!

79:43. அதன் நேரத்தைப் பற்றி அறிவிக்க விதிக்கப்பட்டிருப்பவர் (முஹம்மதான) நீர் அல்லர்.

79:44. உம்முடைய இரட்சகரே அதன் தலைவிதியைத் தீர்மானிக்கின்றார்.

79:45. உம்முடைய இறைப்பணியானது அதனை எதிர்பார்ப்பவர்களை எச்சரிப்பதேயாகும்.

79:46. அவர்கள் அதனைக் காண்கின்ற அந்நாளில், ஒரு மாலைப்பொழுதோ அல்லது ஒரு நாளின் பாதியோ அவர்கள் நிலைத்திருந்ததாக அவர்கள் உணர்வார்கள்.