Find
Chapter 73: Al-Muzzammil
73:0-20
20 verses Revelation order 3
سورة المزمل

. ١:٧٣ يٰأَيُّهَا المُزَّمِّلُ

. ٢:٧٣ قُمِ الَّيلَ إِلّا قَليلًا

. ٣:٧٣ نِصفَهُ أَوِ انقُص مِنهُ قَليلًا

. ٤:٧٣ أَو زِد عَلَيهِ وَرَتِّلِ القُرءانَ تَرتيلًا

. ٥:٧٣ إِنّا سَنُلقى عَلَيكَ قَولًا ثَقيلًا

. ٦:٧٣ إِنَّ ناشِئَةَ الَّيلِ هِىَ أَشَدُّ وَطـًٔا وَأَقوَمُ قيلًا

. ٧:٧٣ إِنَّ لَكَ فِى النَّهارِ سَبحًا طَويلًا

. ٨:٧٣ وَاذكُرِ اسمَ رَبِّكَ وَتَبَتَّل إِلَيهِ تَبتيلًا

. ٩:٧٣ رَبُّ المَشرِقِ وَالمَغرِبِ لا إِلٰهَ إِلّا هُوَ فَاتَّخِذهُ وَكيلًا

. ١٠:٧٣ وَاصبِر عَلىٰ ما يَقولونَ وَاهجُرهُم هَجرًا جَميلًا

. ١١:٧٣ وَذَرنى وَالمُكَذِّبينَ أُولِى النَّعمَةِ وَمَهِّلهُم قَليلًا

. ١٢:٧٣ إِنَّ لَدَينا أَنكالًا وَجَحيمًا

. ١٣:٧٣ وَطَعامًا ذا غُصَّةٍ وَعَذابًا أَليمًا

. ١٤:٧٣ يَومَ تَرجُفُ الأَرضُ وَالجِبالُ وَكانَتِ الجِبالُ كَثيبًا مَهيلًا

. ١٥:٧٣ إِنّا أَرسَلنا إِلَيكُم رَسولًا شٰهِدًا عَلَيكُم كَما أَرسَلنا إِلىٰ فِرعَونَ رَسولًا

. ١٦:٧٣ فَعَصىٰ فِرعَونُ الرَّسولَ فَأَخَذنٰهُ أَخذًا وَبيلًا

. ١٧:٧٣ فَكَيفَ تَتَّقونَ إِن كَفَرتُم يَومًا يَجعَلُ الوِلدٰنَ شيبًا

. ١٨:٧٣ السَّماءُ مُنفَطِرٌ بِهِ كانَ وَعدُهُ مَفعولًا

. ١٩:٧٣ إِنَّ هٰذِهِ تَذكِرَةٌ فَمَن شاءَ اتَّخَذَ إِلىٰ رَبِّهِ سَبيلًا

. ٢٠:٧٣ إِنَّ رَبَّكَ يَعلَمُ أَنَّكَ تَقومُ أَدنىٰ مِن ثُلُثَىِ الَّيلِ وَنِصفَهُ وَثُلُثَهُ وَطائِفَةٌ مِنَ الَّذينَ مَعَكَ وَاللَّهُ يُقَدِّرُ الَّيلَ وَالنَّهارَ عَلِمَ أَن لَن تُحصوهُ فَتابَ عَلَيكُم فَاقرَءوا ما تَيَسَّرَ مِنَ القُرءانِ عَلِمَ أَن سَيَكونُ مِنكُم مَرضىٰ وَءاخَرونَ يَضرِبونَ فِى الأَرضِ يَبتَغونَ مِن فَضلِ اللَّهِ وَءاخَرونَ يُقٰتِلونَ فى سَبيلِ اللَّهِ فَاقرَءوا ما تَيَسَّرَ مِنهُ وَأَقيمُوا الصَّلوٰةَ وَءاتُوا الزَّكوٰةَ وَأَقرِضُوا اللَّهَ قَرضًا حَسَنًا وَما تُقَدِّموا لِأَنفُسِكُم مِن خَيرٍ تَجِدوهُ عِندَ اللَّهِ هُوَ خَيرًا وَأَعظَمَ أَجرًا وَاستَغفِرُوا اللَّهَ إِنَّ اللَّهَ غَفورٌ رَحيمٌ

Cloaked

73:1. O you cloaked one.

73:2. Meditate during the night, except rarely.

73:3. Half of it, or a little less.

73:4. Or a little more. And read the Quran from cover to cover.

73:5. We will give you a heavy message.

73:6. The meditation at night is more effective, and more righteous.

73:7. You have a lot of time during the day for other matters.

73:8. You shall commemorate the name of your Lord, to come ever closer and closer to Him.

73:9. Lord of the east and the west; there is no other god besides Him. You should choose Him as your advocate.

73:10. And remain steadfast in the face of their utterances, and disregard them in a nice manner.

73:11. And let Me deal with the rejectors, who have been generously blessed; just give them a little time.

73:12. We have severe punishments, and Hell.

73:13. Food that can hardly be swallowed, and painful retribution.

73:14. The day will come when the earth and the mountains will quake, and the mountains will turn into a weightless pile.

73:15. We have sent to you a messenger, just as we sent to Pharaoh a messenger.

73:16. Pharaoh disobeyed the messenger and, consequently, we punished him severely.

73:17. If you disbelieve, how can you evade a day so terrible that it makes the infants gray-haired?

73:18. The heaven will shatter therefrom. His promise is true.

73:19. This is a reminder; whoever wills, let him choose the path to his Lord.

73:20. Your Lord knows that you meditate during two-thirds of the night, or half of it, or one-third of it, and so do some of those who believed with you. God has designed the night and the day, and He knows that you cannot always do this. He has pardoned you. Instead, you shall read what you can of the Quran. He knows that some of you may be ill, others may be traveling in pursuit of God's provisions, and others may be striving in the cause of God. You shall read what you can of it, and observe the contact prayers (Salat), give the obligatory charity (Zakat), and lend God a loan of righteousness. Whatever good you send ahead on behalf of your souls, you will find it at God far better and generously rewarded. And implore God for forgiveness. God is Forgiver, Most Merciful.

அங்கி அணிந்தவர்

73:1. அங்கி அணிந்தவரே, உம்மைத்தான்.

73:2. அரிதாகத் தவிர்த்து, இரவுப் பொழுதுகளில் தியானிப்பீராக.

73:3. அதன் பாதி, அல்லது ஒரு சற்றுக் குறைவாக.

73:4. அல்லது ஒரு சற்று அதிகமாக. மேலும் முதல் பக்கத்திலிருந்து கடைசிப்பக்கம் வரை இக்குர்ஆனைப் படிப்பீராக.

73:5. நாம் உமக்கு ஒரு கனமான தூதுச் செய்தியைத் தருவோம்.

73:6. இரவினில் தியானிப்பதானது அதிக நற்பலனளிப்பது, மேலும் மிகவும் நன்னெறியானது.

73:7. மற்ற விஷயங்களுக்கு பகற்பொழுதில் உமக்கு ஏராளமானதொரு நேரம் உள்ளது.

73:8. எப்பொழுதும் அவருக்கு அருகிலும் மிக அருகிலும் வருவதற்காக, உம்முடைய இரட்சகரின் பெயரை நீர் நினைவு கூர்ந்திட வேண்டும்.

73:9. கிழக்கு மற்றும் மேற்கின் இரட்சகர்; அவருடன் வேறு தெய்வம் இல்லை. உமக்கு ஆதரவாளராக அவரை நீர் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்.

73:10. மேலும் அவர்களுடைய கூற்றுகளை எதிர் கொள்ளும் போது உறுதிப்பாட்டுடன் தொடர்ந்து இருப்பீராக, மேலும் அழகியதொரு முறையில் அவர்களை அலட்சியம் செய்து விடுவீராக.

73:11. தாராளமாக ஆசீர்வதிக்கப்பட்டிருக்கின்ற, ஏற்றுக் கொள்ள மறுப்போர் மீது நான் நடவடிக்கை எடுத்துக் கொள்கின்றேன்; அவர்களுக்குச் சற்று அவகாசம் அளிப்பீராக.

73:12. கடுமையான தண்டனைகளும், நரகமும் நம்மிடம் உள்ளன.

73:13. கடினமாகவே விழுங்கக் கூடிய உணவும், வலிநிறைந்ததொரு தண்டனையும்.

73:14. பூமியும் மலைகளும் அதிரும் பொழுது அந்நாள் வரும், மேலும் மலைகளானவை எடையற்றதோர் குவியலாகி விடும்.

73:15. ஃபேரோவுக்கு ஒரு தூதரை நாம் அனுப்பிய அதே விதமாகவே, உங்களுக்கும் நாம் ஒரு தூதரை அனுப்பியுள்ளோம்.

73:16. ஃபேரோ அத்தூதருக்குக் கீழ்ப்படிய மறுத்தான் மேலும், அதன் விளைவாக, நாம் அவனைக் கடுமையாகத் தண்டித்தோம்.

73:17. நீங்கள் நம்பமறுத்தால், சிசுக்களையும் நரைத்த முடியுடையவர்களாக ஆக்கி விடுகின்ற அளவுக்கு மிகப் பயங்கரமானதொரு நாளினை எவ்வாறு நீங்கள் தவிர்த்துக் கொள்ள இயலும்?

73:18. வானம் அங்கிருந்து தகர்ந்து விடும். அவருடைய வாக்குறுதி உண்மையானதாகும்.

73:19. இது ஒரு நினைவூட்டலாகும்; எவரெல்லாம் நாடுகின்றாரோ, அவர் தன் இரட்சகரின் பால் தன்னுடைய பாதையைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளட்டும்.

73:20. இரவுப் பொழுதினில் மூன்றில் இரண்டு பாகம், அல்லது அதில் பாதி, அல்லது அதில் மூன்றில் ஒரு பாகம் நீர் தியானிக்கின்றீர், மேலும் உம்முடன் நம்பிக்கை கொண்ட சிலரும் அவ்வாறே செய்கின்றனர் என்பதை உம்முடைய இரட்சகர் அறிகின்றார். இரவையும் பகலையும் கடவுள் வடிவமைத்துள்ளார், மேலும் எல்லாக் காலங்களிலும் உங்களால் இதனைச் செய்ய முடியாது என்பதையும் அவர் அறிகின்றார். அவர் உங்களைப் பிழை பொறுத்து விட்டார். அதற்குப் பதிலாக, குர்ஆனிலிருந்து உங்களால் இயன்ற வரை நீங்கள் படிக்க வேண்டும். உங்களில் சிலர் நோயுற்றிருக்கக் கூடும், மற்றவர்கள் கடவுள்-ன் வாழ்வாதாரங்களைத் தேடியவாறு பிரயாணத்தில் இருக்கக் கூடும், மேலும் மற்றவர்கள் கடவுள்-ன் நிமித்தம் பாடுபட்டுக் கொண்டிருக்கக் கூடும் என்பதை அவர் அறிகின்றார். அதிலிருந்து உங்களால் இயன்றவரை நீங்கள் படிக்க வேண்டும், மேலும் (ஸலாத்) தொடர்புத் தொழுகைகளைக் கடைப் பிடிக்கவும் (ஜகாத்) கடமையான தர்மத்தைக் கொடுக்கவும், மேலும் நன்னெறியெனும் ஒரு கடனைக் கடவுள்-க்குக் கடனளிக்கவும் வேண்டும். உங்களுடைய ஆத்மாக்களுக்காக நீங்கள் முற்படுத்தி அனுப்பி வைக்கின்ற நல்லது எதுவாயினும், அதனை மிகச் சிறந்ததாகவும் தாராளமாக வெகுமதியளிக்கப்பட்டதாகவும் கடவுள்-யிடம் நீங்கள் காண்பீர்கள். மேலும் பாவமன்னிப்பிற்காகக் கடவுள்-யிடம் இறைஞ்சுங்கள். கடவுள் மன்னிப்பவர், மிக்க கருணையாளர்.