Find
Chapter 34: Saba'
34:0-54
54 verses Revelation order 58
سورة سبأ

. ١:٣٤ الحَمدُ لِلَّهِ الَّذى لَهُ ما فِى السَّمٰوٰتِ وَما فِى الأَرضِ وَلَهُ الحَمدُ فِى الـٔاخِرَةِ وَهُوَ الحَكيمُ الخَبيرُ

. ٢:٣٤ يَعلَمُ ما يَلِجُ فِى الأَرضِ وَما يَخرُجُ مِنها وَما يَنزِلُ مِنَ السَّماءِ وَما يَعرُجُ فيها وَهُوَ الرَّحيمُ الغَفورُ

. ٣:٣٤ وَقالَ الَّذينَ كَفَروا لا تَأتينَا السّاعَةُ قُل بَلىٰ وَرَبّى لَتَأتِيَنَّكُم عٰلِمِ الغَيبِ لا يَعزُبُ عَنهُ مِثقالُ ذَرَّةٍ فِى السَّمٰوٰتِ وَلا فِى الأَرضِ وَلا أَصغَرُ مِن ذٰلِكَ وَلا أَكبَرُ إِلّا فى كِتٰبٍ مُبينٍ

. ٤:٣٤ لِيَجزِىَ الَّذينَ ءامَنوا وَعَمِلُوا الصّٰلِحٰتِ أُولٰئِكَ لَهُم مَغفِرَةٌ وَرِزقٌ كَريمٌ

. ٥:٣٤ وَالَّذينَ سَعَو فى ءايٰتِنا مُعٰجِزينَ أُولٰئِكَ لَهُم عَذابٌ مِن رِجزٍ أَليمٌ

. ٦:٣٤ وَيَرَى الَّذينَ أوتُوا العِلمَ الَّذى أُنزِلَ إِلَيكَ مِن رَبِّكَ هُوَ الحَقَّ وَيَهدى إِلىٰ صِرٰطِ العَزيزِ الحَميدِ

. ٧:٣٤ وَقالَ الَّذينَ كَفَروا هَل نَدُلُّكُم عَلىٰ رَجُلٍ يُنَبِّئُكُم إِذا مُزِّقتُم كُلَّ مُمَزَّقٍ إِنَّكُم لَفى خَلقٍ جَديدٍ

. ٨:٣٤ أَفتَرىٰ عَلَى اللَّهِ كَذِبًا أَم بِهِ جِنَّةٌ بَلِ الَّذينَ لا يُؤمِنونَ بِالـٔاخِرَةِ فِى العَذابِ وَالضَّلٰلِ البَعيدِ

. ٩:٣٤ أَفَلَم يَرَوا إِلىٰ ما بَينَ أَيديهِم وَما خَلفَهُم مِنَ السَّماءِ وَالأَرضِ إِن نَشَأ نَخسِف بِهِمُ الأَرضَ أَو نُسقِط عَلَيهِم كِسَفًا مِنَ السَّماءِ إِنَّ فى ذٰلِكَ لَـٔايَةً لِكُلِّ عَبدٍ مُنيبٍ

. ١٠:٣٤ وَلَقَد ءاتَينا داوۥدَ مِنّا فَضلًا يٰجِبالُ أَوِّبى مَعَهُ وَالطَّيرَ وَأَلَنّا لَهُ الحَديدَ

. ١١:٣٤ أَنِ اعمَل سٰبِغٰتٍ وَقَدِّر فِى السَّردِ وَاعمَلوا صٰلِحًا إِنّى بِما تَعمَلونَ بَصيرٌ

. ١٢:٣٤ وَلِسُلَيمٰنَ الرّيحَ غُدُوُّها شَهرٌ وَرَواحُها شَهرٌ وَأَسَلنا لَهُ عَينَ القِطرِ وَمِنَ الجِنِّ مَن يَعمَلُ بَينَ يَدَيهِ بِإِذنِ رَبِّهِ وَمَن يَزِغ مِنهُم عَن أَمرِنا نُذِقهُ مِن عَذابِ السَّعيرِ

. ١٣:٣٤ يَعمَلونَ لَهُ ما يَشاءُ مِن مَحٰريبَ وَتَمٰثيلَ وَجِفانٍ كَالجَوابِ وَقُدورٍ راسِيٰتٍ اعمَلوا ءالَ داوۥدَ شُكرًا وَقَليلٌ مِن عِبادِىَ الشَّكورُ

. ١٤:٣٤ فَلَمّا قَضَينا عَلَيهِ المَوتَ ما دَلَّهُم عَلىٰ مَوتِهِ إِلّا دابَّةُ الأَرضِ تَأكُلُ مِنسَأَتَهُ فَلَمّا خَرَّ تَبَيَّنَتِ الجِنُّ أَن لَو كانوا يَعلَمونَ الغَيبَ ما لَبِثوا فِى العَذابِ المُهينِ

. ١٥:٣٤ لَقَد كانَ لِسَبَإٍ فى مَسكَنِهِم ءايَةٌ جَنَّتانِ عَن يَمينٍ وَشِمالٍ كُلوا مِن رِزقِ رَبِّكُم وَاشكُروا لَهُ بَلدَةٌ طَيِّبَةٌ وَرَبٌّ غَفورٌ

. ١٦:٣٤ فَأَعرَضوا فَأَرسَلنا عَلَيهِم سَيلَ العَرِمِ وَبَدَّلنٰهُم بِجَنَّتَيهِم جَنَّتَينِ ذَواتَى أُكُلٍ خَمطٍ وَأَثلٍ وَشَىءٍ مِن سِدرٍ قَليلٍ

. ١٧:٣٤ ذٰلِكَ جَزَينٰهُم بِما كَفَروا وَهَل نُجٰزى إِلَّا الكَفورَ

. ١٨:٣٤ وَجَعَلنا بَينَهُم وَبَينَ القُرَى الَّتى بٰرَكنا فيها قُرًى ظٰهِرَةً وَقَدَّرنا فيهَا السَّيرَ سيروا فيها لَيالِىَ وَأَيّامًا ءامِنينَ

. ١٩:٣٤ فَقالوا رَبَّنا بٰعِد بَينَ أَسفارِنا وَظَلَموا أَنفُسَهُم فَجَعَلنٰهُم أَحاديثَ وَمَزَّقنٰهُم كُلَّ مُمَزَّقٍ إِنَّ فى ذٰلِكَ لَـٔايٰتٍ لِكُلِّ صَبّارٍ شَكورٍ

. ٢٠:٣٤ وَلَقَد صَدَّقَ عَلَيهِم إِبليسُ ظَنَّهُ فَاتَّبَعوهُ إِلّا فَريقًا مِنَ المُؤمِنينَ

. ٢١:٣٤ وَما كانَ لَهُ عَلَيهِم مِن سُلطٰنٍ إِلّا لِنَعلَمَ مَن يُؤمِنُ بِالـٔاخِرَةِ مِمَّن هُوَ مِنها فى شَكٍّ وَرَبُّكَ عَلىٰ كُلِّ شَىءٍ حَفيظٌ

. ٢٢:٣٤ قُلِ ادعُوا الَّذينَ زَعَمتُم مِن دونِ اللَّهِ لا يَملِكونَ مِثقالَ ذَرَّةٍ فِى السَّمٰوٰتِ وَلا فِى الأَرضِ وَما لَهُم فيهِما مِن شِركٍ وَما لَهُ مِنهُم مِن ظَهيرٍ

. ٢٣:٣٤ وَلا تَنفَعُ الشَّفٰعَةُ عِندَهُ إِلّا لِمَن أَذِنَ لَهُ حَتّىٰ إِذا فُزِّعَ عَن قُلوبِهِم قالوا ماذا قالَ رَبُّكُم قالُوا الحَقَّ وَهُوَ العَلِىُّ الكَبيرُ

. ٢٤:٣٤ قُل مَن يَرزُقُكُم مِنَ السَّمٰوٰتِ وَالأَرضِ قُلِ اللَّهُ وَإِنّا أَو إِيّاكُم لَعَلىٰ هُدًى أَو فى ضَلٰلٍ مُبينٍ

. ٢٥:٣٤ قُل لا تُسـَٔلونَ عَمّا أَجرَمنا وَلا نُسـَٔلُ عَمّا تَعمَلونَ

. ٢٦:٣٤ قُل يَجمَعُ بَينَنا رَبُّنا ثُمَّ يَفتَحُ بَينَنا بِالحَقِّ وَهُوَ الفَتّاحُ العَليمُ

. ٢٧:٣٤ قُل أَرونِىَ الَّذينَ أَلحَقتُم بِهِ شُرَكاءَ كَلّا بَل هُوَ اللَّهُ العَزيزُ الحَكيمُ

. ٢٨:٣٤ وَما أَرسَلنٰكَ إِلّا كافَّةً لِلنّاسِ بَشيرًا وَنَذيرًا وَلٰكِنَّ أَكثَرَ النّاسِ لا يَعلَمونَ

. ٢٩:٣٤ وَيَقولونَ مَتىٰ هٰذَا الوَعدُ إِن كُنتُم صٰدِقينَ

. ٣٠:٣٤ قُل لَكُم ميعادُ يَومٍ لا تَستَـٔخِرونَ عَنهُ ساعَةً وَلا تَستَقدِمونَ

. ٣١:٣٤ وَقالَ الَّذينَ كَفَروا لَن نُؤمِنَ بِهٰذَا القُرءانِ وَلا بِالَّذى بَينَ يَدَيهِ وَلَو تَرىٰ إِذِ الظّٰلِمونَ مَوقوفونَ عِندَ رَبِّهِم يَرجِعُ بَعضُهُم إِلىٰ بَعضٍ القَولَ يَقولُ الَّذينَ استُضعِفوا لِلَّذينَ استَكبَروا لَولا أَنتُم لَكُنّا مُؤمِنينَ

. ٣٢:٣٤ قالَ الَّذينَ استَكبَروا لِلَّذينَ استُضعِفوا أَنَحنُ صَدَدنٰكُم عَنِ الهُدىٰ بَعدَ إِذ جاءَكُم بَل كُنتُم مُجرِمينَ

. ٣٣:٣٤ وَقالَ الَّذينَ استُضعِفوا لِلَّذينَ استَكبَروا بَل مَكرُ الَّيلِ وَالنَّهارِ إِذ تَأمُرونَنا أَن نَكفُرَ بِاللَّهِ وَنَجعَلَ لَهُ أَندادًا وَأَسَرُّوا النَّدامَةَ لَمّا رَأَوُا العَذابَ وَجَعَلنَا الأَغلٰلَ فى أَعناقِ الَّذينَ كَفَروا هَل يُجزَونَ إِلّا ما كانوا يَعمَلونَ

. ٣٤:٣٤ وَما أَرسَلنا فى قَريَةٍ مِن نَذيرٍ إِلّا قالَ مُترَفوها إِنّا بِما أُرسِلتُم بِهِ كٰفِرونَ

. ٣٥:٣٤ وَقالوا نَحنُ أَكثَرُ أَموٰلًا وَأَولٰدًا وَما نَحنُ بِمُعَذَّبينَ

. ٣٦:٣٤ قُل إِنَّ رَبّى يَبسُطُ الرِّزقَ لِمَن يَشاءُ وَيَقدِرُ وَلٰكِنَّ أَكثَرَ النّاسِ لا يَعلَمونَ

. ٣٧:٣٤ وَما أَموٰلُكُم وَلا أَولٰدُكُم بِالَّتى تُقَرِّبُكُم عِندَنا زُلفىٰ إِلّا مَن ءامَنَ وَعَمِلَ صٰلِحًا فَأُولٰئِكَ لَهُم جَزاءُ الضِّعفِ بِما عَمِلوا وَهُم فِى الغُرُفٰتِ ءامِنونَ

. ٣٨:٣٤ وَالَّذينَ يَسعَونَ فى ءايٰتِنا مُعٰجِزينَ أُولٰئِكَ فِى العَذابِ مُحضَرونَ

. ٣٩:٣٤ قُل إِنَّ رَبّى يَبسُطُ الرِّزقَ لِمَن يَشاءُ مِن عِبادِهِ وَيَقدِرُ لَهُ وَما أَنفَقتُم مِن شَىءٍ فَهُوَ يُخلِفُهُ وَهُوَ خَيرُ الرّٰزِقينَ

. ٤٠:٣٤ وَيَومَ يَحشُرُهُم جَميعًا ثُمَّ يَقولُ لِلمَلٰئِكَةِ أَهٰؤُلاءِ إِيّاكُم كانوا يَعبُدونَ

. ٤١:٣٤ قالوا سُبحٰنَكَ أَنتَ وَلِيُّنا مِن دونِهِم بَل كانوا يَعبُدونَ الجِنَّ أَكثَرُهُم بِهِم مُؤمِنونَ

. ٤٢:٣٤ فَاليَومَ لا يَملِكُ بَعضُكُم لِبَعضٍ نَفعًا وَلا ضَرًّا وَنَقولُ لِلَّذينَ ظَلَموا ذوقوا عَذابَ النّارِ الَّتى كُنتُم بِها تُكَذِّبونَ

. ٤٣:٣٤ وَإِذا تُتلىٰ عَلَيهِم ءايٰتُنا بَيِّنٰتٍ قالوا ما هٰذا إِلّا رَجُلٌ يُريدُ أَن يَصُدَّكُم عَمّا كانَ يَعبُدُ ءاباؤُكُم وَقالوا ما هٰذا إِلّا إِفكٌ مُفتَرًى وَقالَ الَّذينَ كَفَروا لِلحَقِّ لَمّا جاءَهُم إِن هٰذا إِلّا سِحرٌ مُبينٌ

. ٤٤:٣٤ وَما ءاتَينٰهُم مِن كُتُبٍ يَدرُسونَها وَما أَرسَلنا إِلَيهِم قَبلَكَ مِن نَذيرٍ

. ٤٥:٣٤ وَكَذَّبَ الَّذينَ مِن قَبلِهِم وَما بَلَغوا مِعشارَ ما ءاتَينٰهُم فَكَذَّبوا رُسُلى فَكَيفَ كانَ نَكيرِ

. ٤٦:٣٤ قُل إِنَّما أَعِظُكُم بِوٰحِدَةٍ أَن تَقوموا لِلَّهِ مَثنىٰ وَفُرٰدىٰ ثُمَّ تَتَفَكَّروا ما بِصاحِبِكُم مِن جِنَّةٍ إِن هُوَ إِلّا نَذيرٌ لَكُم بَينَ يَدَى عَذابٍ شَديدٍ

. ٤٧:٣٤ قُل ما سَأَلتُكُم مِن أَجرٍ فَهُوَ لَكُم إِن أَجرِىَ إِلّا عَلَى اللَّهِ وَهُوَ عَلىٰ كُلِّ شَىءٍ شَهيدٌ

. ٤٨:٣٤ قُل إِنَّ رَبّى يَقذِفُ بِالحَقِّ عَلّٰمُ الغُيوبِ

. ٤٩:٣٤ قُل جاءَ الحَقُّ وَما يُبدِئُ البٰطِلُ وَما يُعيدُ

. ٥٠:٣٤ قُل إِن ضَلَلتُ فَإِنَّما أَضِلُّ عَلىٰ نَفسى وَإِنِ اهتَدَيتُ فَبِما يوحى إِلَىَّ رَبّى إِنَّهُ سَميعٌ قَريبٌ

. ٥١:٣٤ وَلَو تَرىٰ إِذ فَزِعوا فَلا فَوتَ وَأُخِذوا مِن مَكانٍ قَريبٍ

. ٥٢:٣٤ وَقالوا ءامَنّا بِهِ وَأَنّىٰ لَهُمُ التَّناوُشُ مِن مَكانٍ بَعيدٍ

. ٥٣:٣٤ وَقَد كَفَروا بِهِ مِن قَبلُ وَيَقذِفونَ بِالغَيبِ مِن مَكانٍ بَعيدٍ

. ٥٤:٣٤ وَحيلَ بَينَهُم وَبَينَ ما يَشتَهونَ كَما فُعِلَ بِأَشياعِهِم مِن قَبلُ إِنَّهُم كانوا فى شَكٍّ مُريبٍ

Sheba

34:1. Praise be to God - to whom belongs everything in the heavens and the earth; all praise is also due to Him in the Hereafter. He is the Most Wise, the Cognizant.

34:2. He knows everything that goes into the earth, and everything that comes out of it, and everything that comes down from the sky, and everything that climbs into it. He is the Most Merciful, the Forgiving.

34:3. Those who disbelieve have said, "The Hour will never come to pass!" Say, "Absolutely - by my Lord - it will most certainly come to you. He is the Knower of the future. Not even the equivalent of an atom's weight is hidden from Him, be it in the heavens or the earth. Not even smaller than that, or larger (is hidden). All are in a profound record."

34:4. Most certainly, He will reward those who believe and lead a righteous life. These have deserved forgiveness and a generous provision.

34:5. As for those who constantly challenge our revelations, they have incurred a retribution of painful humiliation.

34:6. It is evident to those who are blessed with knowledge that this revelation from your Lord to you is the truth, and that it guides to the path of the Almighty, the Most Praiseworthy.

34:7. Those who disbelieve have said, "Let us show you a man who tells you that after you are torn apart you will be created anew.

34:8. "Either he fabricated lies about God, or he is crazy." Indeed, those who disbelieve in the Hereafter have incurred the worst retribution; they have gone far astray.

34:9. Have they not seen all the things in front of them and behind them, in the heaven and the earth? If we willed, we could have caused the earth to swallow them, or caused masses to fall on them from the sky. This should be a sufficient proof for every obedient servant.

34:10. We endowed David with blessings from us: "O mountains, submit with him, and you too, O birds." We softened the iron for him.

34:11. "You may make shields that fit perfectly, and work righteousness. Whatever you do, I am Seer thereof."

34:12. To Solomon we committed the wind at his disposal, traveling one month coming and one month going. And we caused a spring of oil to gush out for him. Also, the jinns worked for him, by his Lord's leave. Any one of them who disregarded our commands, we subjected him to a severe retribution.

34:13. They made for him anything he wanted - niches, statues, deep pools, and heavy cooking pots. O family of David, work (righteousness) to show your appreciation. Only a few of My servants are appreciative.

34:14. When the appointed time for his death came, they had no clue that he had died. It was not until one of the animals tried to eat his staff, and he fell down, that the jinns realized that he was dead. They thus realized that if they really knew the unseen, they would have stopped working so hard as soon as he died.

34:15. Sheba's homeland used to be a marvel, with two gardens on the right and the left. Eat from your Lord's provisions, and be appreciative of Him - good land, and a forgiving Lord.

34:16. They turned away and, consequently, we poured upon them a disastrous flood, and we substituted their two gardens into two gardens of bad tasting fruits, thorny plants, and a skimpy harvest.

34:17. We thus requited them for their disbelief. Do we not requite only the disbelievers?

34:18. We placed between them and the communities that we blessed other oases, and we secured the journey between them: "Travel therein days and nights in complete security."

34:19. But they (turned unappreciative and) challenged: "Our Lord, we do not care if You increase the distance of our journeys (without any stations)." They thus wronged their own souls. Consequently, we made them history, and scattered them into small communities throughout the land. This should provide lessons for those who are steadfast, appreciative.

34:20. Satan found them readily fulfilling his expectations. They followed him, except a few believers.

34:21. He never had any power over them. But we thus distinguish those who believe in the Hereafter from those who are doubtful about it.* Your Lord is in full control of all things.

*34:21 The criteria that inform us whether or not we believe in the Hereafter are in 6:113, 17:45, & 39:45. These three criteria bring out our true convictions, regardless of our oral statements.

34:22. Say, "Implore the idols you have set up beside God. They do not possess as much as a single atom in the heavens, or the earth. They possess no partnership therein, nor does He permit them to be His assistants."

34:23. Intercession with Him will be in vain, unless it coincides with His will. When their minds are finally settled down, and they ask, "What did your Lord say," they will say, "The truth." He is the Most High, the Most Great.

34:24. Say, "Who provides for you, from the heavens and the earth?" Say, "God," and "Either we or you are guided, or have gone far astray."

34:25. Say, "You are not responsible for our crimes, nor are we responsible for what you do."

34:26. Say, "Our Lord will gather us all together before Him, then He will judge between us equitably. He is the Judge, the Omniscient."

34:27. Say, "Show me the idols you have set up as partners with Him!" Say, "No; He is the one God, the Almighty, Most Wise."

34:28. We have sent you (O Rashad)* to all the people, a bearer of good news, as well as a warner, but most people do not know.

*34:28 As detailed in Appendix 2, the name of this messenger is mathematically coded into the Quran as ``Rashad Khalifa.'' By adding the numerical value of the name ``Rashad'' (505), plus the numerical value of the name ``Khalifa'' (725), plus the number of the sura (34), plus the number of the verse (28), we obtain a total that conforms with the Quran's 19-based mathematical miracle, which was unveiled through Rashad Khalifa. (505+725+34+28=1292=19x68). More information is given in 5:19 and its footnote.

34:29. They challenge, "When will this promise come to pass, if you are truthful?"

34:30. Say, "You have a specific time, on a specific day, that you cannot delay by one hour, nor advance."

34:31. Those who disbelieve have said, "We will not believe in this Quran, nor in the previous scriptures." If you could only envision these transgressors when they stand before their Lord! They will argue with one another back and forth. The followers will tell their leaders, "If it were not for you, we would have been believers."

34:32. The leaders will say to those who followed them, "Are we the ones who diverted you from the guidance after it came to you? No; it is you who were wicked."

34:33. The followers will say to their leaders, "It was you who schemed night and day, then commanded us to be unappreciative of God, and to set up idols to rank with Him." They will be ridden with remorse, when they see the retribution, for we will place shackles around the necks of those who disbelieved. Are they not justly requited for what they did?

34:34. Every time we sent a warner to a community, the leaders of that community said, "We reject the message you are sent with."

34:35. They also said, "We are more powerful, with more money and children, and we will not be punished."

34:36. Say, "My Lord is the One who controls all provisions; He grants the provisions to whomever He wills, or reduces them, but most people do not know."

34:37. It is not your money or your children that bring you closer to us. Only those who believe and lead a righteous life will receive the reward for their works, multiplied manifold. In the abode of Paradise they will live in perfect peace.

34:38. As for those who consistently challenge our revelations, they will abide in retribution.

34:39. Say, "My Lord is the One who controls all provisions; He increases the provisions for whomever He chooses from among His servants, or reduces them. Anything you spend (in the cause of God), He will reward you for it; He is the Best Provider."

34:40. On the day when He summons them all, He will say to the angels, "Did these people worship you?"

34:41. They will answer, "Be You glorified. You are our Lord and Master, not them. Instead, they were worshiping the jinns; most of them were believers therein."

34:42. On that day, you possess no power to help or harm one another, and we will say to the transgressors, "Taste the retribution of the Hell that you used to deny."

34:43. When our proofs were recited to them, perfectly clear, they said, "This is simply a man who wants to divert you from the way your parents are worshiping." They also said, "These are fabricated lies." Those who disbelieved also said about the truth that came to them, "This is obviously magic."

*34:43 By adding the gematrical value of "Rashad" (505), plus the value of "Khalifa" (725), plus this verse number (43), we get 505+725+43=1273=19x67. See Appendices 1 & 2.

34:44. We did not give them any other books to study, nor did we send to them before you another warner.

34:45. Those before them disbelieved, and even though they did not see one-tenth* of (the miracle) we have given to this generation, when they disbelieved My messengers, how severe was My retribution!

*34:45 The great miracles given to Moses and Jesus were limited in time and place; they were witnessed by a few people who happened to exist in that place at that time. But the mathematical miracle of the Quran is perpetual (see 74:30-35 and Appendix 1).

34:46. Say, "I ask you to do one thing: Devote yourselves to God, in pairs or as individuals, then reflect. Your friend (Rashad) is not crazy. He is a manifest warner to you, just before the advent of a terrible retribution."

*34:46 By placing the gematrical value of "Rashad" (505) next to the value of "Khalifa" (725), then the sura number (34), and the verse number (46), we get 5057253446=19x266171234.

34:47. Say, "I do not ask you for any wage; you can keep it. My wage comes only from God. He witnesses all things."

34:48. Say, "My Lord causes the truth to prevail. He is the Knower of all secrets."

34:49. Say, "The truth has come; while falsehood can neither initiate anything, nor repeat it."

34:50. Say, "If I go astray, I go astray because of my own shortcomings. And if I am guided, it is because of my Lord's inspiration. He is Hearer, Near."

34:51. If you could only see them when the great terror strikes them; they cannot escape then, and they will be taken away forcibly.

34:52. They will then say, "We now believe in it," but it will be far too late.

34:53. They have rejected it in the past; they have decided instead to uphold conjecture and guesswork.*

*34:53 People of all religions tend to forsake the word of God and uphold the words of men. The Jews and the Muslims uphold the Mishnah (Hadith) and Gemarrah (Sunna), while the Christians uphold a trinity invented by the Nicene Conference, 325 years after Jesus.

34:54. Consequently, they were deprived of everything they longed for. This is the same fate as their counterparts in the previous generations. They harbored too many doubts.

ஷீபா

34:1. வானங்களிலும் பூமியிலும் உள்ள ஒவ்வொன்றுக்கும் உரியவரான கடவுள்-க்கே புகழ்ச்சி உரியது; அத்துடன் மறுவுலகிலும் அனைத்துப் புகழும் அவருக்கே உரித்தானது. அவர்தான் ஞானம் மிகுந்தவர், நன்கறிந்தவர்.

34:2. பூமிக்குள் செல்லும் ஒவ்வொன்றையும், அதிலிருந்து வெளிவரும் ஒவ்வொன்றையும், மேலும் வானத்திலிருந்து இறங்கி வரும் ஒவ்வொன்றையும், அதில் ஏறும் ஒவ்வொன்றையும் அவர் அறிகின்றார். அவர் தான் மிக்க கருணையாளர், மன்னிக்கின்றவர்.

34:3. நம்பமறுப்பவர்கள் கூறினர், "வேளை ஒருபோதும் நிகழாது!" கூறுவீராக, "மிக நிச்சயமாக - என் இரட்சகர் மீது ஆணை - மிகவும் உறுதியாக அது உங்களிடம் வரும். அவர்தான் எதிர்காலத்தை அறிந்தவர். ஓர் அணுவின் எடைக்குச் சமமானது கூட அவருக்கு மறைவானதாக இல்லை. அது வானங்களிலோ அல்லது பூமியிலோ இருந்த போதிலும். அதனை விடச் சிறியதோ அல்லது பெரியதோ கூட (மறைவானதில்லை). அனைத்தும் ஆழ்ந்ததோர் பதிவேட்டில் உள்ளது."

34:4. மிக உறுதியாக, நம்பிக்கை கொண்டு மேலும் நன்னெறியானதொரு வாழ்வு நடத்துபவர்களுக்கு அவர் வெகுமதியளிப்பார். இவர்கள் மன்னிப்புக்கும் தாராளமானதொரு வாழ்வாதாரத்துக்கும் தகுதியாகி விட்டனர்.

34:5. நமது வெளிப்பாடுகளுக்குத் தொடர்ந்து சவால் விடுபவர்களைப் பொறுத்த வரை, அவர்கள் வலி நிறைந்த இழிவானதொரு தண்டனைக்கு உள்ளாகி விட்ட னர்.

34:6. உம் இரட்சகரிடமிருந்து உமக்கு வந்துள்ள இந்த வெளிப்பாடு சத்தியம் என்பதும், மேலும் எல்லாம் வல்லவர், மிகுந்த புகழுக்குத் தகுதியானவரின் பாதையை நோக்கி இது வழி நடத்துகின்றது என்பதும் அறிவைக் கொண்டு ஆசீர்வதிக்கப் பெற்றவர்களுக்கு வெளிப்படையானதாகும்.

34:7. நம்பமறுப்பவர்கள் கூறினர், "நீங்கள் துண்டுகளாகக் கிழிந்து போன பின்னர், நீங்கள் மீண்டும் புதிதாகப் படைக்கப்படுவீர்கள் என்று உங்களிடம் கூறுகின்ற ஒரு மனிதனை நாங்கள் உங்களுக்குக் காட்டுகின்றோம்.

34:8. "ஒன்று, கடவுள்-ஐப் பற்றிப் பொய்களை அவர் புனைந்து கொண்டார், அல்லது அவர் ஒரு கிறுக்கராக இருக்கின்றார்." உண்மையில், மறுவுலகினை நம்பமறுப்பவர்கள் மோசமான தண்டனைக்கு உள்ளாகி விட்டனர்; அவர்கள் நெடிய வழிகேட்டில் சென்று விட்டனர்.

34:9. வானத்திலும் பூமியிலும், அவர்களுக்கு முன்னாலும் பின்னாலுமுள்ள அனைத்துப் பொருட்களையும் அவர்கள் காணவில்லையா? நாம் நாடியிருந்தால், பூமி அவர்களை விழுங்கும்படி நாம் செய்திருப்போம், அல்லது விண்ணிலிருந்து பாளங்களை அவர்கள் மீது விழும்படிச் செய்திருப்போம். கீழ்ப்படிதலுள்ள ஒவ்வொரு ஊழியருக்கும் போதுமானதொரு சான்றாக இது திகழ வேண்டும்.

34:10. நம்மிடமிருந்து ஆசிகளைக் கொண்டு டேவிட்டுக்கு நாம் கொடையளித்தோம்: "மலைகளே, அவருடன் சரணடையுங்கள், மேலும் பறவைகளே, நீங்களும் தான்." அவருக்காக இரும்பை நாம் மிருதுவாக்கினோம்.

34:11. "மிகச் சரியாகப் பொருந்துகின்ற கவசங்களை நீர் செய்து கொள்ளலாம், மேலும் நன்னெறிகள் புரிவீராக. நீர் என்ன செய்தாலும், அதனைப் பார்ப்பவனாக நான் இருக்கின்றேன்."

34:12. ஒரு மாதம் வந்து கொண்டும், ஒரு மாதம் சென்று கொண்டும் பயணிப்பதாக, சாலமனிடம் காற்றை அவருடைய கட்டுப்பாட்டின்கீழ் நாம் ஒப்படைத்தோம். மேலும் அவருக்காக ஒரு எண்ணெய் ஊற்றை நாம் பொங்கி வரச் செய்தோம். அத்துடன், அவருடைய இரட்சகரின் அனுமதியின் பேரில், ஜின்கள் அவருக்கு வேலை செய்தன. அவர்களில் நமது கட்டளைகளைப் புறக்கணித்த எவர் ஒருவராயினும், கடுமையானதொரு தண்டனைக்கு அவரை நாம் ஆட்படுத்தினோம்.

34:13. அவர் விரும்பிய எந்த ஒன்றையும் அவர்கள் அவருக்காகச் செய்தார்கள்-மாடங்கள், சிலைகள், ஆழமான குளங்கள், மேலும் கனத்த சமையல் பாத்திரங்கள். டேவிட்டின் குடும்பத்தாரே, உங்கள் நன்றியறி தலைக் காட்டுவதற்காக, (நன்னெறியான) காரியங்கள் செய்யுங்கள். என்னுடைய ஊழியர்களில் மிகச் சிலர் மட்டுமே நன்றியுடையவர்களாக இருக்கின்றனர்.

34:14. அவருடைய மரணத்திற்கு என்று நிர்ணயிக்கப்பட்ட நேரம் வந்த பொழுது, அவர் மரணித்து விட்டார் என அவர்களுக்குத் துப்பு எதுவும் கிடைக்கவில்லை. பிராணிகளில் ஒன்று அவருடைய கைத்தடியை தின்ன முயற்சித்து அவர் கீழே விழும் வரை, அவர் மரணித்து விட்டார் என்பதை அந்த ஜின்கள் புரிந்து கொள்ளவில்லை. அவர்கள் மெய்யாகவே மறைவானவற்றை அறிந்திருப்பார்களாயின், அவர் மரணித்து விட்டவுடன் அத்தனை கடுமையாக வேலை செய்ததை அவர்கள் நிறுத்தியிருப்பார்கள் என்பதை இவ்விதமாக அவர்கள் புரிந்து கொண்டனர்.

34:15. ஷீபாவின் சொந்த நாடு, வலப்புறத்திலும் இடப் புறத்திலும் இரு சோலைகளுடன் ஓர் அற்புதமாக இருந்து வந்தது. உங்களுடைய இரட்சகரின் வாழ்வாதாரங்களிலிருந்து உண்ணுங்கள், மேலும் அவருக்கு நன்றியுடையவர்களாக இருங்கள் - நல்ல நிலம், மேலும் மன்னிக்கின்ற ஓர் இரட்சகர்.

34:16. அவர்கள் திரும்பிச் சென்றனர், மேலும் அதன் விளைவாக, பேரழிவானதொரு வெள்ளத்தை அவர்கள் மீது நாம் ஊற்றினோம், மேலும் அவர்களுடைய இரு தோட்டங்களை, கெட்ட சுவை கொண்ட கனிகளையும், முட்செடிகளையும் மேலும் பற்றாக்குறை மகசூலையும் கொண்ட இரு தோட்டங்களாக நாம் மாற்றியமைத்தோம்.

34:17. இவ்விதமாக அவர்களுடைய நம்பமறுத்தலுக்காக அவர்களை நாம் பழிதீர்த்தோம். நம்பமறுப்பவர்களை மட்டுமே நாம் பழிதீர்க்கின்றோம் அல்லவா?

34:18. அவர்களுக்கும் நாம் ஆசீர்வதித்த அந்த சமூகங்களுக்குமிடையில் வேறு பிற பாலைவனச் சோலைகளை நாம் அமைத்தோம், மேலும் அவற்றுக்கிடையில் பயணத்தை நாம் பாதுகாப்பானதாக ஆக்கினோம்: "இரவிலும் பகலிலும் முழுமையான பாதுகாப்புடன் அதில் பயணம் செய்யுங்கள்."

34:19. ஆனால் அவர்கள் (நன்றிகெட்டவர்களாக மாறினார்கள், மேலும்) சவால் விடுத்தார்கள்: "எங்கள் இரட்சகரே, (நிறுத்தங்கள் எதுவுமின்றி) எங்கள் பயணங்களின் தூரத்தை நீர் அதிகரித்தாலும் நாங்கள் கவலைப்பட மாட்டோம்." இவ்விதமாக அவர்கள் தங்களுடைய சொந்த ஆத்மாக்களுக்கே அநீதி இழைத்துக் கொண்டனர். அதன் விளைவாக, அவர்களை நாம் சரித்திரம் ஆக்கினோம், மேலும் பூமி எங்கிலும் சிறுசிறு சமூகங்களாக அவர்களை நாம் சிதறச்செய்தோம். உறுதிப்பாடு உடையவர்களாகவும், நன்றியுடையவர்களாகவும் இருப்பவர்களுக்கு இது படிப்பினைகளை வழங்க வேண்டும்.

34:20. தன்னுடைய எதிர்பார்ப்புகளை உவப்புடன் பூர்த்தி செய்பவர்களாக சாத்தான் அவர்களைக் கண்டான். ஒரு சில நம்பிக்கையாளர்களைத் தவிர, அவர்கள் அவனைப் பின்பற்றினர்.

34:21. அவர்கள் மீது அவனுக்கு எந்த ஆதிக்கமும் ஒரு போதும் இருந்ததில்லை. ஆனால் இவ்விதமாக மறுவுலகின் மீது நம்பிக்கை கொண்டிருப்பவர்களை, அதன் மீது ஐயம் கொண்டிருப்பவர்களிலிருந்து நாம் பிரித்துக் காட்டுகின்றோம்.* உம் இரட்சகர் அனைத்துப் பொருட்களையும் முழு கட்டுப்பாட்டில் வைத்து உள்ளார்.

*34:21 நாம் மறுவுலகின் மீது நம்பிக்கை கொண்டிருக்கின்றோமா இல்லையா என்பதை நமக்குத் தெரிவிக்கும் அளவு கோல்கள் 6:113, 17:45, 39:45ல் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த மூன்று அளவுகோல்களும் நம்முடைய வாய் மொழியான அறிவிப்புகளை பொருட்படுத்தாமல், நமது மெய்யான திட நம்பிக்கைகளை வெளிக்கொண்டு வருகின்றன.*34:21 நாம் மறுவுலகின் மீது நம்பிக்கை கொண்டிருக்கின்றோமா இல்லையா என்பதை நமக்குத் தெரிவிக்கும் அளவு கோல்கள் 6:113, 17:45, 39:45 ல் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த மூன்று அளவுகோல்களும் நம்முடைய வாய் மொழியான அறிவிப்புகளை பொருட்படுத்தாமல், நமது மெய்யான திட நம்பிக்கைகளை வெளிக்கொண்டு வருகின்றன.

34:22. கூறுவீராக, "கடவுள்-வுடன் நீங்கள் அமைத்துக் கொண்டிருக்கும் அந்தப் போலித் தெய்வங்களை இறைஞ்சுங்கள். வானங்களிலோ, அல்லது பூமியிலோ ஒரே ஓர் அணுவின் அளவு கூட அவர்கள் சொந்தமாகக் கொண்டிருக்கவில்லை. அதில் எந்தப் பங்கும் அவர்களுக்கு இல்லை, அன்றி அவருடைய உதவியாளர்களாக இருக்கவும் அவர்களை அவர் அனுமதிப்பதில்லை."

34:23. அவருடைய நாட்டத்திற்கு ஒத்திருந்தாலேயன்றி, அவரிடம் பரிந்துரை என்பது வீணானதே ஆகும். இறுதியில் அவர்களுடைய மனங்கள் ஓய்ந்தவுடன், அவர்கள் கேட்கின்றனர், "உங்களுடைய இரட்சகர் என்ன கூறினார்," அவர்கள் கூறுவார்கள், "சத்தியம்." அவர்தான் மிக உயர்ந்தவர், மிகவும் பெரியவர்.

34:24. கூறுவீராக, "வானங்கள் மற்றும் பூமியிலிருந்து, உங்களுக்கு வழங்குபவர் யார்?" கூறுவீராக, "கடவுள்," மேலும் "வழிநடத்தப்பட்டவர்கள் அல்லது நெடிய வழி கேட்டில் சென்று விட்டவர்கள், நாங்களா அல்லது நீங்களா."

34:25. கூறுவீராக, "எங்கள் குற்றங்களுக்கு நீங்கள் பொறுப்பாக மாட்டீர்கள், அன்றி நீங்கள் செய்பவற்றுக்கு நாங்களும் பொறுப்பாக மாட்டோம்."

34:26. கூறுவீராக, "நம்முடைய இரட்சகர் நம் அனைவரையும் ஒன்றாக அவர் முன்னால் திரட்டுவார், பின்னர் நமக்கிடையில் அவர் நீதமாகத் தீர்ப்பளிப்பார். அவர் தான் நீதிபதி, எல்லாம் அறிந்தவர்."

34:27. கூறுவீராக, "அவருடன் பங்குதாரர்களாக நீங்கள் அமைத்துக் கொண்ட போலித்தெய்வங்களை எனக்குக் காட்டுங்கள்!" கூறுவீராக, "அல்ல; அவர்தான் ஒரே கடவுள், எல்லாம் வல்லவர், ஞானம் மிகுந்தவர்."

34:28. எல்லா மக்களுக்கும் நற்செய்தியைத் தாங்கிய ஒருவராக, அவ்வண்ணமே ஓர் எச்சரிப்பவராக உம்மை (ரஷாதே)* நாம் அனுப்பியுள்ளோம், ஆனால் அதிகமான மக்கள் அறியமாட்டார்கள்.

*34:28 பின் இணைப்பு 2ல் விவரிக்கப்பட்டுள்ளபடி, இந்தத் தூதரின் பெயர் "ரஷாத்கலீஃபா" என குர்ஆனிற்குள் கணித ரீதியில் குறியீடு செய்யப்பட்டுள்ளது. "ரஷாத்" என்ற பெயரின் எழுத்தெண்மதிப்புடன்(505), "கலீஃபா" என்ற பெயரின் எழுத்தெண் மதிப்பையும் (725), சூரா எண்ணையும் (34), வசன எண்ணையும் (28) நாம் கூட்டினால், ரஷாத் கலீஃபாவால் திரைவிலக்கப்பட்ட 19ன் அடிப்படையிலான குர்ஆனின் கணித அற்புதத்திற்கு இசைந்திருக்கும் ஒரு கூட்டுத் தொகையை நாம் கிடைக்கப் rnபெறுகின்றோம் (505+725+34+28=1292=19x68). 5:19 லும் அதற்குரிய அடிக்குறிப்பிலும் அதிகத் தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

34:29. அவர்கள் சவால் விடுகின்றனர், "நீர் உண்மையாளராக இருந்தால், எப்பொழுது இந்த வாக்குறுதி நிறை வேறும்?"

34:30. கூறுவீராக, "உங்களால் ஒரு மணி நேரமும் தாமதப்படுத்தவோ அல்லது முற்படுத்தவோ இயலாத, குறிப்பிட்டதொரு நேரம், குறிப்பிட்டதொரு நாளில் உங்களுக்கு உள்ளது."

34:31. நம்பமறுப்பவர்கள் கூறினர், "நாங்கள் இந்தக் குர்ஆனிலோ, அன்றி முந்திய வேதங்களிலோ நம்பிக்கை கொள்ள மாட்டோம்." தங்களுடைய இரட்சகரின் முன்னர் இந்த வரம்புமீறுகின்றவர்கள் நிற்பதைக் காண மட்டும் உம்மால் இயன்றால்! அவர்கள் ஒருவர் மற்றவருடன் முன்னும் பின்னும் தர்க்கித்துக் கொள்வார்கள். பின்பற்றியவர்கள் தங்களுடைய தலைவர்களிடம் கூறுவார்கள், "நீங்கள் மட்டும் இல்லாதிருந்தால், நாங்கள் நம்பிக்கையாளர்களாக இருந்திருப்போம்."

34:32. தலைவர்கள் தங்களைப் பின்பற்றியவர்களிடம் கூறுவார்கள், "வழிகாட்டுதலிலிருந்து, அது உங்களிடம் வந்ததன் பின்னர் நாங்களா உங்களைத் திசை திருப்பினோம்? அல்ல; நீங்கள்தான் தீயவர்களாக இருந்தீர்கள்".

34:33. பின்பற்றியவர்கள் தங்கள் தலைவர்களிடம் கூறுவார்கள், "நீங்கள்தான் இரவும் பகலும் சூழ்ச்சி செய்தீர்கள், பின்னர் கடவுள்-க்கு நன்றி கெட்டவர்களாக இருக்குமாறும், அவருடன் போட்டியாக போலித்தெய்வங்களை அமைத்துக் கொள்ளுமாறும் எங்களுக்குக் கட்டளையிட்டீர்கள்." தண்டனையை அவர்கள் காணும் பொழுது, அவர்கள் குற்றவுணர்வால் அழுத்தப்படுவார்கள், ஏனெனில் நம்பமறுத்தவர்களின் கழுத்துகளைச் சுற்றி விலங்குகளை நாம் அமைத்து விடுவோம். அவர்கள் செய்தவற்றுக்காக அவர்கள் நியாயமாகத்தான் கூலி கொடுக்கப்படுகின்றனர் அல்லவா?

34:34. ஒரு சமூகத்துக்கு ஓர் எச்சரிப்பவரை நாம் அனுப்புகின்ற ஒவ்வொரு முறையும், அந்தச் சமூகத்தின் தலைவர்கள் கூறினர், "உம்முடன் அனுப்பப்பட்ட தூதுச் செய்தியை நாங்கள் மறுக்கின்றோம்."

34:35. அத்துடன் அவர்கள் கூறினர், "அதிகமான செல்வத்துடனும் பிள்ளைகளுடனும், நாங்கள் அதிக சக்தியுடையவர்களாக இருக்கின்றோம், மேலும் நாங்கள் தண்டிக்கப்பட மாட்டோம்."

34:36. கூறுவீராக, "என் இரட்சகர்தான் அனைத்து வாழ்வாதாரங்களையும் கட்டுப்படுத்துகின்றவர்; தான் நாடுகின்ற எவருக்கும் வாழ்வாதாரங்களை அவர் கொடுக்கின்றார், அல்லது அவற்றைக் குறைக்கின்றார், ஆனால் அதிகமான மக்கள் அறியமாட்டார்கள்."

34:37. உங்களுடைய பணமோ அல்லது உங்களுடைய பிள்ளைகளோ உங்களை நம்மிடம் நெருக்கமாகக் கொண்டு வருவதில்லை. நம்பிக்கை கொண்டு, நன்னெறியானதொரு வாழ்வை நடத்துபவர்கள் மட்டுமே தங்களுடைய காரியங்களுக்குரிய வெகுமதியை, பன்மடங்காகப் பெருக்கிப் பெற்றுக் கொள்வார்கள். சுவனவீட்டில் அவர்கள் பூரணமான சாந்தியுடன் வசிப்பார்கள்.

34:38. நமது வெளிப்பாடுகளுக்கு இடையறாது அறை கூவல் விடுபவர்களைப் பொறுத்தவரை, அவர்கள் தண்டனையில் தங்கியிருப்பார்கள்.

34:39. கூறுவீராக, "என் இரட்சகர்தான் அனைத்து வாழ் வாதாரங்களையும் கட்டுப்படுத்துகின்றவர்; தன் ஊழியர்களில் தான் தேர்ந்தெடுக்கின்ற எவருக்கும் வாழ்வாதாரங்களை அவர் அதிகரிக்கின்றார், அல்லது அவற்றைக் குறைக்கின்றார். (கடவுள் நிமித்தம்) எந்த ஒன்றை நீங்கள் செலவிட்டாலும், அதற்காக அவர் உங்களுக்கு வெகுமதியளிப்பார். வழங்குபவர்களில் அவர்தான் மிகச் சிறந்தவர்."

34:40. அவர்கள் அனைவரையும் அவர் ஒன்று திரட்டும் அந்நாளில், வானவர்களிடம் அவர் கூறுவார், "இந்த மக்கள் உங்களை வழிபட்டார்களா?"

34:41. அவர்கள் பதிலளிப்பார்கள், "நீரே துதிப்பிற்குரியவர். நீரே எங்கள் இரட்சகரும் எஜமானருமாவீர், அவர்கள் அல்லர். மாறாக, அவர்கள் ஜின்களை வழிபட்டுக் கொண்டிருந்தனர்; அவர்களில் அதிகமானோர் அவற்றில் நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தனர்."

34:42. அந்நாளில், நீங்கள் ஒருவர் மற்றவருக்கு உதவி செய்யவோ அல்லது தீங்கிழைக்கவோ சக்தி எதுவும் பெற்றிருக்க மாட்டீர்கள். மேலும் வரம்புமீறியவர்களிடம் நாம் கூறுவோம், "நீங்கள் ஏற்கமறுத்துக் கொண்டிருந்த நரகத்தின் தண்டனையைச் சுவையுங்கள்."

34:43. முற்றிலும் தெளிவாக, நமது சான்றுகள் அவர்களிடம் எடுத்துக் கூறப்பட்ட போது, அவர்கள் கூறினர், "இவர் உங்களுடைய பெற்றோர்கள் வழிபட்டுக் கொண்டிருக்கின்ற முறையை விட்டு உங்களைத் திருப்பி விட விரும்புகின்ற வெறும் மனிதர்தான்." அத்துடன் அவர்கள் கூறினர், "இவை புனைந்து கொள்ளப்பட்ட பொய்களாகும்." தங்களிடம் வந்த சத்தியத்தைப் பற்றி நம்பிக்கை கொள்ள மறுத்தவர்கள் இப்படிக் கூட கூறினர், "இது கண்கூடான மாயாஜாலமாகும்."

*34:43 "ரஷாத்" தின் எழுத்தெண் மதிப்புடன் (505), "கலீஃபா" என்பதன் மதிப்பையும் (725), இந்த வசன எண்ணையும் (43), நாம் கூட்டினால் நமக்குக் கிடைப்பது 505+725+43=1273=19x67. பின் இணைப்புகள் 1 & 2 ஐப் பார்க்கவும்.

34:44. படிப்பதற்கு வேறு எந்தப் புத்தகத்தையும் நாம் அவர்களுக்குக் கொடுக்கவில்லை, அன்றி உமக்கு முன்னர் வேறொரு எச்சரிப்பவரை அவர்களுக்கு நாம் அனுப்பவுமில்லை.

34:45. அவர்களுக்கு முன்னர் இருந்தவர்கள் நம்பமறுத்தனர், மேலும் இந்தத் தலைமுறைக்கு நாம் தந்த (அற்புதத்தில்) பத்தில்* ஒன்றைக் கூட அவர்கள் கண்டிராத போதிலும், என் தூதர்களை அவர்கள் நம்பமறுத்த பொழுது, என்னுடைய தண்டனை எவ்வளவு கடுமையானதாக இருந்தது!

*34:45 மோஸஸுக்கும் ஜீஸஸுக்கும் கொடுக்கப்பட்ட மாபெரும் அற்புதங்கள் காலம் மற்றும் இடம் ஆகிய எல்லைகளுக்கு உட்பட்டிருந்தன; அந்த இடத்தில் அந்தக் காலகட்டத்தில் இருக்க நேர்ந்த சில மனிதர்களால் அவை பார்க்கப் பட்டன. ஆனால் குர்ஆனுடைய கணித அற்புதமோ நிலைத்திருப்பதாகும் (பார்க்க 74:30-35 மற்றும் பின் இணைப்பு 1).

34:46. கூறுவீராக, "ஒரு விஷயத்தைச் செய்யும்படி உங்களை நான் கேட்டுக் கொள்கின்றேன்: இருவர் இருவராகவோ அல்லது தனித்தவர்களாகவோ கடவுள்-க்கு உங்களையே அர்ப்பணித்துக் கொள்ளுங்கள், பின்னர் சிந்தியுங்கள். உங்களுடைய தோழர் (ரஷாத்) கிறுக்கர் அல்லர். அவர் பயங்கரமானதொரு தண்டனையின் வருகைக்குச் சற்று முன்னர், உங்களுக்குத் தெளிவானதொரு எச்சரிப்பவரேயாவார்."

*34:46 "ரஷாத்" தின் எழுத்தெண்மதிப்புக்கு (505) அருகில் "கலீபா" என்பதன் மதிப்பையும் (725) பின்னர் சூரா எண் ணையும் (34), மேலும் வசன எண்ணையும் (46) நாம் அமைத்தால், நமக்குக் கிடைப்பது 5057253446=19x266171234.

34:47. கூறுவீராக, "நான் உங்களிடம் எந்தக் கூலியும் கேட்கவில்லை; நீங்களே அதனை வைத்துக் கொள்ளலாம். எனது கூலி கடவுள்-யிடமிருந்து மட்டுமே வருகின்றது. அனைத்து விஷயங்களுக்கும் அவர் சாட்சியாகின்றார்."

34:48. கூறுவீராக, "என் இரட்சகர் சத்தியம் மிகைக்கும் படிச் செய்கின்றார். அவர்தான் அனைத்து இரகசியங்களையும் அறிந்தவர்."

34:49. கூறுவீராக, "சத்தியம் வந்துவிட்டது; அதே சமயம் பொய்மை எதனையும் துவக்கவோ அன்றி அதனை மறுபடியும் செய்யவோ முடியாது."

34:50. கூறுவீராக, "நான் வழிதவறிச் செல்வேனாயின், என்னுடைய சொந்தக் குறைபாடுகளினாலேயே நான் வழிதவறிச் செல்கின்றேன். மேலும் நான் வழி நடத்தப்பட்டால், என்னுடைய இரட்சகர் தந்த உள்ளுணர்வே அதற்குக் காரணமாகும். அவர் செவியேற்பவர், அருகிலிருப்பவர்."

34:51. அந்த மாபெரும் பயங்கரம் அவர்களைத் தாக்கும் பொழுது, அவர்களை உம்மால் பார்க்க மட்டும் முடிந்தால்; அப்போது அவர்களால் தப்பிக்க முடியாது, மேலும் அவர்கள் பலவந்தமாகப் பிடித்துச் செல்லப்படுவார்கள்.

34:52. அப்போது அவர்கள் கூறுவார்கள், "இப்போது நாங்கள் இதில் நம்பிக்கை கொள்கின்றோம்," ஆனால் அது மிக நீண்ட தாமதமாகி இருக்கும்.

34:53. இதற்கு முன்னர் அவர்கள் இதனை ஏற்றுக் கொள்ள மறுத்தனர்; அதற்குப் பதிலாக, யூகங்களையும்* அனுமானங்களையும் ஆதரிப்பதென அவர்கள் முடிவெடுத்து விட்டனர்.

*34:53 அனைத்து மதங்களைச் சேர்ந்த மக்களும் கடவுளின் வார்த்தையை கைவிட்டு விட்டு மனிதர்களின் வார்த்தைகளை ஆதரிக்க முற்படுகின்றனர். யூதர்களும் முஸ்லிம்களும் மிஷ்னாஹ் (ஹதீஸ்) மற்றும் ஜெமரா (சுன்னா) வை ஆதரிக்கின்றனர், அதே சமயம் கிறித்துவர்களோ, ஜீஸஸிற்குப் பின்னர் 325 வருடங்கள் கழித்து நைசீன் மாநாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட திரித்துவத்தை ஆதரிக்கின்றனர்.

34:54. அதன் விளைவாக, அவர்கள் விருப்பம் கொண்டிருந்த ஒவ்வொன்றும் அவர்களிடமிருந்து பறிக்கப்பட்டது. முந்திய தலைமுறையினரில் அவர்களைப் போன்றவர்களுக்கு நேரிட்ட அதே விதிதான் இது. அவர்கள் மிக அதிகமான ஐயங்களைக் கொண்டிருந்தனர்.